ரஜினிகாந்த் கால் செய்தும் எடுக்காத விஜய் பட நடிகை..

ரஜினிகாந்த் கால் செய்தும் எடுக்காத விஜய் பட நடிகை..

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் வெளிவந்த பேட்ட, மாஸ்டர், மாறன், தங்கலான் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக கார்த்தியுடன் இணைந்து சர்தார் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த் கால் செய்தும் எடுக்காத விஜய் பட நடிகை.. | Malavika Mohanan Shares Experience Of Rajini Call

கோலிவுட் முதல் பாலிவுட் வரை தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள மாளவிகா மோகனன், இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். சமீபத்தில் தன்னுடைய 32வது பிறந்தநாளை கொண்டாடிய மாளவிகா, தனக்கு நடந்த சுவாரஷ்யமான ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், மாஸ்டர் படம் வெளியான சமயத்தில், அப்படத்தை பார்த்த பலர், போன் செய்திருந்தனர். பல அழைப்புகள் இதுபோல் வந்ததால் அவற்றை எடுக்காமல் தவிர்த்துவிட்டேன். இதற்கிடையே, ஒரு பிஆர்ஓ என்னை பார்த்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், போன் செய்தபோது எடுக்கவில்லை என்று கூறினார்.

ரஜினிகாந்த் கால் செய்தும் எடுக்காத விஜய் பட நடிகை.. | Malavika Mohanan Shares Experience Of Rajini Call

அவர் சொன்னதும் நான் அதிர்ச்சியடைந்தேன். பின் எனக்கு வந்த அனைத்து அழைப்பு நம்பர்களுக்கு போன் செய்தேன். கடைசியில் ரஜினி சார் மீண்டும் எனக்கு போன் செய்து பேசினார்.

அவரது பணிவு என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சினிமாத்துறையில் நான் புதியவள், அப்படியான எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன் செய்து என்னை புகழ்ந்து, மாஸ்டரில் நீங்கள் அழகாக இருந்தீர்கள், உங்கள் படத்தின் அபார வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்று கூறினார். இந்நிகழ்வு என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு என்று உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்துள்ளார் மாளவிகா மோகனன்.

LATEST News

Trending News