நான் முஸ்லீம்.. கண்ணை மூட சொல்லி அதை செய்தான்.. குலைநடுங்க வைக்கும் கொடுமை.. ரிஹானா பகீர்..
சன் டிவியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘மீனாட்சி பொண்ணுங்க’ உள்ளிட்ட பிரபல சீரியல்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை ரிஹானா பேகம், யூடியூப் பேட்டிகளில் தன்னை பெண்ணியவாதியாக அடையாளப்படுத்தி, பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்.
ஆனால், தொழிலதிபர் ராஜ்கண்ணன் (அழகர்சாமி என ரிஹானா குற்றம்சாட்டுகிறார்) என்பவர், ரிஹானா தன்னை காதலித்து, 2024 ஜனவரி 20 அன்று கோபாலபுரத்தில் திருமணம் செய்து, 20 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த சர்ச்சை, ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.ரிஹானா, ஆவடி காவல் ஆணையரகத்தில் கூடுதல் ஆணையர் பவானீஸ்வரியிடம் மனு அளித்து, பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.
“ராஜ்கண்ணன் என்னை ஏமாற்றி, கண்களை மூடி நிற்கச் சொன்னான். சர்ப்ரைஸ் தருவதாகக் கூறி, நான் ஒரு செயின் போடுவான் என நினைத்தேன். ஆனால், அவன் தாலி கட்டி, திருமணம் செய்து விட்டான்.
நான் ஒரு முஸ்லிம், எனக்கு தாலி கட்டுவது ஏற்புடையதல்ல,” என ஆதங்கத்துடன் தெரிவித்தார். மேலும், ராஜ்கண்ணன் உண்மையில் அழகர்சாமி என்றும், அவர் தனது அடையாளத்தை மாற்றி, 15-18 லட்சம் ரூபாய் பறித்து, பிளாக்மெயில் செய்து, போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் மிரட்டியதாக குற்றம்சாட்டினார்.
ரிஹானாவின் விளக்கத்தில், 2024 ஜனவரி 20 அன்று, அவர் பட்டுப் புடவை, நகைகளுடன் திருமணத்திற்கு செல்லும் பெண்ணைப் போல தோற்றமளித்து, ராஜ்கண்ணனை நெருக்கமாக கட்டிப்பிடித்து, தெளிவான மனநிலையில் இருந்ததாக புகைப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஆனால், அவர், “எனக்கு தெரியாமல் தாலி கட்டப்பட்டது” எனவும், இரு நாட்களுக்கு பிறகு வாட்ஸ்அப் மூலம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறுகிறார். இந்த முரண்பாடு, “தெளிவாக இருந்தவர் எப்படி தெரியாமல் திருமணம் செய்யப்பட்டார்?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ராஜ்கண்ணன், தனது புகாரில், ரிஹானா தன்னை ஏமாற்றி, தயாரிப்பாளர்களுடன் “அட்ஜஸ்ட்மென்ட்” செய்ய வேண்டும் என கண்டிஷன் போட்டதாக கூறியுள்ளார்.
ரிஹானாவோ, அவர் பாலியல் தொழில் ஏஜென்டாக செயல்படுவதாகவும், நாம் தமிழர் கட்சியின் சீமான்-விஜயலட்சுமி விவகாரத்தில் 80 லட்சம் ரூபாய்க்கு சதி செய்ய முயன்றதாகவும் குற்றம்சாட்டினார்.
ஆவடி காவல் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.