“என் உறவினரே என் உடம்பை..” அசோக் செல்வன் மனைவி கீர்த்தி பாண்டியன் அனுபவித்த கொடூரம்..! அவரே கூறிய தகவல்!

“என் உறவினரே என் உடம்பை..” அசோக் செல்வன் மனைவி கீர்த்தி பாண்டியன் அனுபவித்த கொடூரம்..! அவரே கூறிய தகவல்!

பிரபல தமிழ் திரைப்பட நடிகை கீர்த்தி பாண்டியன், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சிறுவயதில் பாடி ஷேமிங் காரணமாக அனுபவித்த மன உளைச்சல்களைப் பகிர்ந்து கொண்டார். 

சிறு வயதில் தனது உடல் தோற்றம் குறித்து உறவினர்களால் கேலி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

“எனது சித்தி, அத்தை போன்றவர்கள் என்னைப் பார்த்து, ‘உடம்பு இப்படி ஒல்லியா இருக்கு, காத்து அடிச்சாலே பறந்து போயிடுவ போல’ என்று கிண்டல் செய்வார்கள்,” என்று கூறினார். 

அப்போது இது உடல் ரீதியான கேலி எனப் புரியாததால், அவர்களின் பேச்சு தன்னைமிகவும் பாதித்ததாக அவர் குறிப்பிட்டார்.

கீர்த்தி மேலும் கூறுகையில், தனது உறவினர்கள் தங்களது உடல் தோற்றம் குறித்து தாழ்வு மனப்பான்மையில் இருந்ததால், தனது ஒல்லியான தோற்றத்தைப் பார்த்து பொறாமை கொண்டு இவ்வாறு பேசியதாக பின்னர் புரிந்து கொண்டதாக தெரிவித்தார். 

“அவர்கள் குண்டாக இருந்ததால், என் உடல் தோற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படி பேசினார்கள்,” என்று அவர் கூறினார். 

 

அந்த சமயங்களில் இத்தகைய கருத்துகள் தன்னை மனதளவில் பாதித்து, தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியதாகவும், ஆனால் இப்போது அத்தகைய உணர்வுகளை மீறி தன்னம்பிக்கையுடன் இருப்பதாகவும் கீர்த்தி தெரிவித்தார்.

பாடி ஷேமிங் என்பது ஒருவரின் உடல் தோற்றத்தைக் கேலி செய்வதன் மூலம் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகும். இது சமூகத்தில் பரவலாக உள்ள பிரச்சனையாகும். 

LATEST News

Trending News