ப்ரா சைஸ் என்ன? மோசமான கேள்விக்கு நிதி அகர்வால் கொடுத்த அதிர்ச்சி பதில்!
கடந்த சில ஆண்டுகளாக நிதி அகர்வால் நடிப்பில் புதிய படங்கள் வெளியாகாத நிலையில், வரும் 24-ம் தேதி 'ஹரி ஹர வீர மல்லு' படம் வெளியாகிறது.
மேலும், பிரபாஸுடன் இவர் நடித்த 'தி ராஜா சாப்' டிசம்பர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிதி, தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியபோது, ரசிகர்கள் பலரும் உங்கள் ப்ரா சைஸ் என்ன..? என்பதில் ஆரம்பித்து அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு அவரது அழகுகளை வர்ணித்து கேள்விகளை எழுப்பினர்.
சினிமாவில் அறிமுகமான புதிதில் இப்படியான மோசமான கேள்விகளுக்கு பதிலளித்து வந்த நிதி அகர்வால் தற்போது அவற்றை தவிர்த்து பதிலடி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், ஒரு ரசிகர், "உங்கள் அம்மாவின் தொலைபேசி எண்ணைத் தாருங்கள், திருமணம் பற்றி பேச வேண்டும்" எனக் கேட்டு அதிர்ச்சியளித்தார்.
இதற்கு நிதி, "அப்படியா? குறும்பு..." என பதிலளித்தார். தமிழில் இவர் சிம்புவுடன் 'ஈஸ்வரன்', ரவிமோகனுடன் 'பூமி', உதயநிதியுடன் 'கலகத் தலைவன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.