சின்ன மருமகள் சீரியல் கதாநாயகி ஸ்வேதா-க்கு கல்யாணம்!! மாப்பிள்ளை யார் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மத்தியில் அதிக கவனம் செலுத்தி வரும் சீரியல் சின்ன மருமகள். விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ஸ்வேதா.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய காதலர் பற்றியும் கல்யாணம் எப்போது என்பது பற்றியும் பகிர்ந்துள்ளார். அதில், என்னுடைய அனைத்து விஷயத்தை பார்த்திருக்கிறேன், என்னை எப்படி ஹாண்டில் பண்ணனும் என்பது அவனுக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவருடன் எப்போது கல்யாணம் என்ற கேள்வியை தொகுப்பாளினி கேட்டுள்ளார். அதற்கு ஸ்வேதா, என்னுடைய ஜாதகப்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல், அக்டோபர் மாதத்திற்குள் நடக்கும் என்று இருக்கிறது.
ஆனால், நவம்பர் அல்லது டிசம்பரின் கல்யாணம் பண்ணலாம் என்று நான் முடிவு செய்து வைத்திருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். அவரது காதலர் யார் என்று வெளியில், இதுவரை ஸ்வேதா அறிமுகப்படுத்தியது கிடையாது. ஆனால் காதலருடன் எடுத்த ஒரு புகைப்படத்தை காட்டாமல் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார்.