புதிய தொடரில் கமிட்டாகியுள்ள பிரபல சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரன்.. எந்த தொலைக்காட்சி தொடர்
ரேஷ்மா முரளிதரன், ஜீ தமிழில் டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் முதன்முதலில் அறிமுகமானவர்.
அதில் பங்குபெற்றுக் கொண்டிருக்கும் போதே பூவே பூச்சூடவா என்ற சீரியலில் நடித்து வந்தார், அதன்பின் கலர்ஸ் தமிழில் அபி டெய்லர் என்ற சீரியலில் நடித்தார். அந்த நேரத்தில் நடிகரும், தொகுப்பாளருமான மதன் பாண்டியனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு விஜய் டிவியில் கிழக்க வாசல் என்ற தொடர் நடித்தார், ஆனால் சீரியல் திடீரென முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலில் நாயகியாக நடித்து வர அதுவும் திடீரென முடிந்தது.
இந்த நிலையில் நடிகை ரேஷ்மா புதிய தொடரில் கமிட்டாகியுள்ளது தெரிய வந்தது.
சன் டிவியில் சுந்தரி சீரியல் புகழ் ஜிஷ்ணு நாயகயாக நடிக்கும் புதிய தொடரில் நாயகியாக நடிக்க ரேஷ்மா கமிட்டாகியுள்ளாராம். தற்போது தொடருக்கு செல்லமே என பெயர் வைத்துள்ளார்களாம்.