மொதல்ல ஜட்டி ஒழுங்கா போடுங்க.. அப்புறம் கயாடு லோகர் மாதிரி ட்ரெஸ் போடலாம்.. வி.ஜே.பார்வதி..

மொதல்ல ஜட்டி ஒழுங்கா போடுங்க.. அப்புறம் கயாடு லோகர் மாதிரி ட்ரெஸ் போடலாம்.. வி.ஜே.பார்வதி..

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியான "டிராகன்" திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 120 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது. 

இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று நடிகை கயாடு லோஹரின் நடிப்பு மற்றும் கவர்ச்சி நடனம்.  குறிப்பாக, படத்தில் திருமண வரவேற்பு விழாவில் அவர் தொடை தெரிய ஆடிய பார்ட்டி வியர் பாடல் காட்சிகள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது.  

இதன் மூலம் கயாடு லோஹர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், பிரபல விஜே பார்வதி, கயாடு லோஹரின் பாடி ஹக்கிங் உடையை மையமாக வைத்து, தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

18+ ஜோக்குகள் மற்றும் அடல்ட் கன்டென்ட்களை போல்டாக பேசி பிரபலமான விஜே பார்வதி, இந்த வீடியோவில் பெண்கள் பாடி ஹக்கிங் உடையை எப்படி ஸ்டைலாக அணிவது மற்றும் எப்படி போஸ் கொடுப்பது என்பது குறித்த சூப்பரான டிப்ஸ்களை வழங்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தவர் நடிகை நயன்தாரா. கஜினி, வில்லு, வல்லவன், பில்லா என பல படங்களில் கிளாமர் ரோல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து ஜோதிகா, த்ரிஷா, அசின் போன்ற முன்னணி நடிகைகளை பின்னுக்குத் தள்ளி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் நயன்தாரா. 

தற்போது அதே பாணியில் "டிராகன்" படத்தின் மூலம் கயாடு லோஹரும் அடுத்த நயன்தாராவாக மாற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பத்திரிகையாளர் அந்தணன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ராஷ்மிகா மந்தனாவை போல கயாடு லோஹருக்கும் ஒரே இரவில் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

"டிராகன்" படத்தில் கயாடு லோஹர், பிரதீப் ரங்கநாதனை திருமணம் செய்து கொள்வதற்காக நடைபெறும் திருமண வரவேற்பு விழாவில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார்.  

உடலை இறுக்கமாக ஒட்டிய பார்ட்டி வியர் உடையில் அவர் தொடை தெரிய ஆடிய அந்த காட்சிகள் தான் இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது.  இந்த கவர்ச்சி நடனமும், கயாடு லோஹரின் அழகும் தான் "டிராகன்" படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அசாமை சேர்ந்தவரான கயாடு லோஹர், மலையாளத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும், "டிராகன்" திரைப்படம் மூலம் தான் தமிழில் அறிமுகமானார்.  அடுத்ததாக "இதயம் முரளி" என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.  

"டிராகன்" படத்திற்கு முன்பே "இதயம் முரளி" படத்தில் கமிட் ஆனதாக கூறப்படுகிறது.  பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான "டிராகன்" திரைப்படம் இதுவரை இந்திய அளவில் 105 கோடி ரூபாயும், உலக அளவில் 137 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

வெளியாகி 18 நாட்கள் ஆகியும் நேற்று கூட இப்படம் 1.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜே பார்வதி தனது வீடியோவில், பாடி ஹக்கிங் பார்ட்டி வியர் உடைகள் அணியும் போது உள்ளாடை அணிவது எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தியுள்ளார். 

"உடலை ஒட்டியபடி இருக்கும் இந்த உடைகளை அணியும் போது உள்ளாடையை கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.  சைடில் மேல் தொடை வரை கட் இருப்பதால், வேறு எதுவும் தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்" என மறைமுகமாக எச்சரித்துள்ளார்.  

மேலும் பியர் ஷேப் பாடி கொண்ட பெண்களுக்கு இந்த உடை கச்சிதமாக பொருந்தும் என்றும் கூறி, அவரும் அதேபோன்ற பாடி ஹக்கிங் உடை அணிந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

கயாடு லோஹரின் கவர்ச்சி நடனம் "டிராகன்" படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது மட்டுமல்லாமல், தற்போது வி.ஜே. பார்வதி போன்ற பிரபலங்களும் அந்த உடையை பற்றி பேசும் அளவிற்கு ட்ரெண்டாகி உள்ளது.  

கயாடு லோஹர் தொடர்ந்து இது போன்ற கவர்ச்சி மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்தால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

LATEST News

Trending News