'புஷ்பா 2' படத்தின் மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட பகத் பாசில்!
சமீபத்தில் வெளியான ’புஷ்பா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது என்பதும் குறிப்பாக பாலிவுட் திரையுலகில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இந்த நிலையில் இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து இருந்த பகத் பாசில் இரண்டாம் பாதியில்தான் அறிமுகமானாலும் நடிப்பில் மிரட்டி இருந்தார் என்பதும் அல்லு அர்ஜுனையே நடிப்பில் ஒரு கட்டத்தில் பின்னுக்கு தள்ளும் அளவுக்கு அவரது நடிப்பு இருந்தது.
இந்த நிலையில் ’புஷ்பா’ முதல் படத்தின் கிளைமாக்ஸில் பகத் பாசிலை அல்லு அர்ஜுன் அவமானப்படுத்தி ஜட்டியுடன் ஓட வைப்பதுடன் படம் முடிந்து இருக்கும். இதனையடுத்து இரண்டாம் பாகத்தில் புஷ்பாவை பகத் பாசில் கேரக்டர் எப்படி பழி வாங்கப் போகிறார் என்பதுதான் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இரண்டாம் பாகத்தின் கிளைமாக்சில் புஷ்பாவை பகத் பாசில் சுட்டுக் கொன்று விடுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிரட்டலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சற்றுமுன் ‘புஷ்பா 2’ படத்தின் மாஸ் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பகத் பாசில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் மிரட்டலாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.