என் அம்மா தற்கொலை முயற்சி செய்யவில்லை!! பாடகி கல்பனாவின் மகள் விளக்கம்..
தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக திகழ்ந்து வந்தவர் கல்பனா. நடிகர் டி எஸ் ராகவேந்திராவின் மகளான கல்பனா 44 வயதில் ஹைதராபாத்தில் வசித்து வந்தார். மார்ச் 4 ஆம் தேதி அவரது வீட்டில் தூக்க மாத்திரிக்கைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். சுயநினைவின்றி இருந்த கல்பனாவை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தற்போது ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கல்பனா சுயநினைவுக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் வெண்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தப்பின் தற்போது வெண்டிலேட்டரை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள், சிகிச்சைக்கு பின் கல்பனா, அபாய கட்டத்தை தாண்டி இருப்பதாகவும் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் விரைவில் சகஜ நிலைக்கு திரும்புவார் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் கல்பனாவின் மகள் அளித்த பேட்டியில், இது தற்கொலை கிடையாது, மன அழுத்தத்திற்காக தூக்கு மாத்திரை அதிகமான அளவில் பயன்படுத்தியதால் இது நடந்தது. இதை தவறான சித்தரிக்க வேண்டாம். சில நாட்களில் அம்மா வீடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளார்.