இது அந்த நடிகையோட ட்ரெஸ்.. நடிகை திவ்யதர்ஷினி கிளாமர் அவதாரம்.. வைரலாகும் போட்டோஸ்..!
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி.
அவரது கலகலப்பான பேச்சுக்கும், நகைச்சுவை உணர்வுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீப காலமாக டிடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை குறைத்துக்கொண்டு, விருது விழாக்கள், திரைப்பட விழாக்களில் மட்டும் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.
டிடி சமீபத்தில் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதனால் அவரால் அதிக நேரம் நிற்க முடியாது. இதன் காரணமாக தற்போது அவர் நிகழ்ச்சிகளை சேரில் அமர்ந்தபடியே தொகுத்து வழங்கி வருகிறார்.
இருப்பினும், அவரது உற்சாகம் மற்றும் எனர்ஜி குறையாமல் நிகழ்ச்சிகளை கலகலப்பாக கொண்டு செல்கிறார். இந்நிலையில், டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான தோற்றத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களில் டிடியின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. வெள்ளி நிற தலைமுடியுடன் கூடிய அவரது ஸ்டைலான தோற்றம் பலரையும் கவர்ந்துள்ளது.
இந்த கிளாமர் உடை சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'கயல்' சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கு சொந்தமானது என்று டிடி தெரிவித்துள்ளார்.
சைத்ரா ரெட்டி தான் இந்த உடையை டிடிக்கு அனுப்பி வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் டிடியின் இந்த கிளாமர் தோற்றம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
டிடியின் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் அவரது புதிய தோற்றத்தை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும்,டிடியின் இந்த சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன. சிகிச்சை காரணமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை குறைத்துக்கொண்டாலும், டிடி தனது ஸ்டைலான தோற்றத்தின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.