இளம் வயதில் நிறைய பேர் என்னை பார்த்து "அதை" செஞ்சிருப்பீங்க.. ஆனால்.. நடிகை மும்தாஜ் மேடையில் கதறல்..! என்ன ஆச்சு..?
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புதிதாக திறக்கப்பட்ட பெண்கள் மதரஸா திறப்பு விழாவில் நடிகை மும்தாஜ் கலந்துகொண்டு கண்ணீர் மல்க உரையாற்றினார்.
தனது கடந்த கால வாழ்க்கையையும், தற்போது இஸ்லாமிய மதத்தின்பால் கொண்ட பற்று மற்றும் ஆன்மீக பயணத்தையும் உருக்கமாக பகிர்ந்து கொண்ட அவரது பேச்சு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
சீர்காழி அருகே நடைபெற்ற இந்த மதரஸா திறப்பு விழாவில் பேசிய நடிகை மும்தாஜ், "உங்கள் அனைவரையும் பார்த்த பிறகு நான் எங்கே இருக்கிறேன், எங்கு வந்திருக்கிறேன் என்பது எனக்கு தெரிகிறது.
என் வாழ்க்கையில் இளம் வயதில் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். உங்களில் நிறைய பேர் என்னை திட்டி இருப்பீர்கள், நிறைய பேர் என்னை பார்த்து என்னென்னவோ செய்திருப்பீர்கள்." என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசத் தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆனால் இன்று பாருங்கள், உங்கள் முன்னாடி வந்து இஸ்லாமிய பெண்ணாக நின்று பேசிக்கொண்டிருக்கிறேன்" என்று கூறியதும் கண்ணீர் விட்டு அழுதார்.
இந்த நெகிழ்ச்சியான தருணம் அவருக்குள் இருந்த மகிழ்ச்சியையும், மன நிறைவையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. "அது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கிறது.
இதற்கு முன்னாடி நான் வெளியில் போய்க்கொண்டிருந்த போது, என்னை சில பெண்கள் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். என்னை இப்படி பார்க்கிறார்கள் என்றால் இறைவன் முன்னாடி எப்படி போய் நிற்பேன் என்று கலங்கினேன்.
இன்று நீங்கள் காட்டிய அன்பை பார்க்கும் போது வார்த்தைகளே இல்லை" என்று தனது மன வருத்தத்தையும், தற்போது தான் பெறும் அன்பையும் கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.
மேலும் தனது கடந்த கால வாழ்க்கையை திரும்பிப் பார்த்த மும்தாஜ், "என் வாழ்க்கையில் என்ன தப்பு செய்தேன் என்றால், அது விதி இருந்தது. அந்த பாவம் எல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்லி விதி இருந்தது" என்று தத்துவார்த்தமாக பேசினார். பர்தா அணிவதன் முக்கியத்துவத்தை உணர்த்திய அவர், "எல்லாரும் பர்தா அணிவார்கள். நான் சிறுவயதில் இருந்தபோது அழகாக இருந்ததாக கூறினார்கள்.
இதனால் நடிக்க சென்றேன். நடிக்க சென்ற போது ஜீன்ஸ் சர்ட் என சிறிய ஆடைகள் அணிந்தேன். அப்போது என்னை எல்லாரும் கீழே பார்ப்பார்கள். அப்போது இதுபோல் எனக்கு சொல்லிக்கொண்டிருந்தால் நிச்சயம் மாறி இருப்பேன்.
இப்போது இறைவன் அருளால் இஸ்லாமிய பெண்ணாக நின்று கொண்டிருக்கிறேன்" என்று தனது ஆன்மீக மாற்றத்திற்கான காரணத்தையும் விவரித்தார். முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் மெக்காவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட மும்தாஜ், தனது ஆன்மீக அனுபவம் குறித்து ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அதில், "இறைவன் அருளால் இரண்டாவது முறையாக மெக்கா வந்துள்ளேன். என்னைப் பற்றி இந்த உலகம் என்ன பேசினாலும், தற்போது புதிதாக பிறந்த குழந்தையாக நான் உணர்கிறேன்.
நீங்கள் மெக்கா, மெதினாவை பாருங்கள். இந்த உலகை நினைத்து கவலைக்கொள்ளாமல் அல்லாவை நினைத்து வழிபடுங்கள். எனது பாவம் செய்த கண்கள் இப்போது மெக்காவை பார்த்து விட்டன. ஆடிய கால்கள் காபாவில் நடந்துவிட்டன.
என்னால் இதை செய்ய முடியும்போது உங்களாலும் இதனை செய்ய முடியும். நல்ல வாழ்க்கையை வாழ இறைவனை வேண்டுங்கள். அல்லா உங்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்பார். யாருக்காகவும், எந்த நிலையிலும் மன உறுதியை விட்டுவிடாதீர்கள்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாம் மதத்தின் மீது ஆழ்ந்த பற்று கொண்ட மும்தாஜ், தற்போது மத ரீதியான நிகழ்வுகளில் அதிக ஈடுபாட்டுடன் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் சீர்காழியில் நடைபெற்ற இந்த பெண்கள் மதரஸா திறப்பு விழாவில் அவர் கலந்துகொண்டு பேசியது, அவரது ஆன்மீக பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.