50 வினாடிக்கு ரூ. 5 கோடி சம்பளம்!! சைடு பிசினஸில் பட்டையை கிளப்பும் டாப் நடிகை...
நடிகைகள் பெரும்பாலும் சினிமாவைத் தாண்டி விளம்பரங்களில் நடித்து காசு சம்பாதித்து வருவார்கள். அப்படி விளம்பரங்கள், கடைத்திறப்பு விழாக்கள் போன்ற பலவற்றில் கலந்து கொண்டு சம்பாதிப்பார்கள்.
அப்படி ஒரு நடிகை டாடா ஸ்கை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு அதற்கான 50 வினாடி விளம்பரத்திற்காக 5 கோடி சம்பளம் வாங்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் நடித்து சுமார் 80 படங்களுக்கும் மேல் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் அவதாரத்தை எடுத்த நயன்தாரா தான் அந்த நடிகை. 2018ல் ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட பிரபலங்கள் 100 பட்டியலில் இடம்பெற்ற ஒரே தென்னிந்திய நடிகையாக நயன் தாரா திகழ்ந்துள்ளார்.
இந்நிலையில் டாடா ஸ்கை நிறுவனத்தின் 50 வினாடி விளம்பரத்தில் நடித்து ரூ. 5 கோடி பெற்று இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை பெற்றார் நயன். ஒரு படத்திற்கு நயன் தாரா கிட்டத்த 12 கோடி ரூபாய் அளவில் சம்பளம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.