என்னடா இது..? டிராகன் பட நடிகையின் போனில் இருந்த அந்த App..! பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

என்னடா இது..? டிராகன் பட நடிகையின் போனில் இருந்த அந்த App..! பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றிருக்கும் "டிராகன்" திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகை கயாடு படத்தின் வெற்றிக்குக் காரணமானவர்களில் கயாடுவும் ஒருவர். இந்நிலையில், டிராகன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரதீப் ரங்கநாதன், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் நடிகை கயாடு லோஹர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

ரசிகர்களை கவரும் விதமாக நிகழ்ச்சியை நடத்த ஏற்பாட்டாளர்கள் ஒரு சுவாரஸ்யமான விளையாட்டை நடத்தினர். அதாவது, பிரதீப் ரங்கநாதனும், கயாடு லோஹரும் ஒருவருக்கொருவர் தங்களது கைப்பேசியை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்றும், அதில் இருக்கும் ஏதாவது ஒரு சுவாரஸ்யமான மற்றும் பாசமான விஷயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. 

இதனை ஏற்றுக்கொண்ட இருவரும் தங்களது கைபேசிகளை மாற்றிக் கொண்டனர். ரசிகர்கள் என்ன கிடைக்கப் போகிறது என்று ஆர்வத்துடன் காத்திருந்தனர். முதலில் கயாடு லோஹரின் கைபேசியை நோண்ட ஆரம்பித்த பிரதீப் ரங்கநாதன், அதில் இருந்த ஒரு அப்ளிகேஷனை பார்த்து அப்படியே ஷாக் ஆகிவிட்டார். 

அது என்ன அப்ளிகேஷன் என்றால் மீம் கிரியேஷன் ஆப்! மீம்ஸ் உருவாக்குவதற்கான செயலி அது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கயாடு அந்த செயலியில் என்ன செய்து வைத்திருந்தார் என்பதைப் பார்த்து தான் பிரதீப் அதிர்ந்து போனார். 

அந்த மீம் கிரியேஷன் அப்பில், நடிகை கயாடு லோஹர் தன்னுடைய புகைப்படத்தை பதிவேற்றி, கீழே ஆங்கிலத்தில் "LEADING ACTRESS OF TOLLYWOOD" அதாவது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை என்று டைப் செய்து வைத்திருந்தார்.

 

இதனை பார்த்த பிரதீப் ரங்கநாதனுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. அதை அப்படியே மேடையில் அனைவர் முன்னிலையிலும் வெளிப்படுத்திவிட்டார். கயாடுவின் ஆசையை அவர் வெளிப்படுத்திய விதத்தை கேட்டு அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது. பிரதீப் இதனை மீடியாவில் சொன்னதும், அங்கிருந்த ரசிகர்கள் கலகலப்பாக சிரித்தனர். 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, ரசிகர்கள் பலரும் கயாடுவை கிண்டல் செய்து கமெண்ட்ஸ் போட ஆரம்பித்தனர். "சல்லி சல்லியா நெருக்கிங்களேடா" என்பது போன்ற கமெண்ட்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

அதாவது, கயாடுவின் ஆசையை நிறைவேற்றுங்கள், நெருக்காதீர்கள் என்பது போல ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களின் இந்த கலகலப்பான கமெண்ட்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த சுவாரஸ்யமான சம்பவம் டிராகன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு கலகலப்பூட்டியது மட்டுமல்லாமல், படத்திற்கான எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்துள்ளது. நடிகர்கள் பிரதீப் மற்றும் கயாடுவின் இந்த கலகலப்பான நட்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

LATEST News

Trending News