பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை- அவரே வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல். இதில் நடிக்கும் பிரபலங்கள் அனைவருமே மக்களிடம் பெரிய வரவேற்பை பெறுகின்றனர்.
ஒரு சின்ன காட்சியில் நடித்தாலும் அந்த நடிகருக்கு மக்களிடம் அங்கீகாரம் கிடைக்கிறது. அப்படி இந்த சீரியலில் ஐஸ்வர்யா வேடத்தில் நடித்திருந்தவர் வைஷாலி.
நன்றாக தான் நடிப்பார், ஆனால் இவருக்கு பதிலாக தற்போது வேறொரு நடிகையை நடிக்க வைத்துள்ளனர் சீரியல் குழுவினர்.
இதுகுறித்து ரசிகர்கள் வைஷாலி திலகாவிடம் கேள்வி கேட்க, அதற்கு அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏன் நடிக்கவில்லை என பலர் கேட்கிறீர்கள்.
அதற்கு பதில் என்னிடமும் இல்லை, என்னை ஏன் சீரியல் குழுவினர் நடிக்க வைக்கவில்லை என எனக்கே தெரியவில்லை என பதில அளித்துள்ளார்.