10 பேருடன் இருக்கணுமா? அதுவும் அந்த பெரிய மனிதர்கள்.. கொந்தளித்த நடிகை சனம் செட்டி..
அம்புலி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகி மாயாவி, தொட்டால் விடாது, விளாசம், கதம் கதம், சவாரி, ஊமை செண்ணாய், மஹா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சனம் செட்டி.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த சனம், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 63 நாட்களில் வெளியேறினார். இதன்பின் பிக்பாஸ் பற்றிய விமர்சனம் செய்து வந்த சனம் செட்டி, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிர்ச்சிகரமான ஒரு தகவலை கூறியிருக்கிறார்.
அதில் எங்களை படங்களில் நடிக்க கூப்பிடுகிறார்கள் என்று பார்த்தால் படுக்கவும் அழைக்கிறார்கள். இதுதான் நிலைமையாக இருக்கிறது. ஸ்கூல் பொண்ணுங்களை வைத்து 10 பேருடன் படு, கஞ்சா அடி, தம் அடி என்று சொல்வது சம உரிமையில்லை.
குறிப்பா இப்படிவொரு மோசமான படத்தை (’பேட் கேர்ள்’ படம்)பெரிய மனிதர்கள் பாராட்டுவதும் தாங்க முடியாத வருத்தமாக இருக்கிறது என்று சனம் செட்டி தெரிவித்துள்ளார்.