இதுக்கு பேர் தான் வாயை விட்டு சூ*** புண்ணாக்கிகிறது.. சிக்கலில் லைலா படக்குழு..!
லைலா திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழாவில் நடிகர் பிருத்வி அரசியல் ரீதியான கருத்துக்களை தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டது. ஆந்திரப் பிரதேசத் தேர்தல்களைப் பற்றி அவர் பேசியது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரின் கோபத்திற்கு வழிவகுத்துள்ளது.
#BoycottLaila என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் ட்ரெண்டானது. இதையடுத்து நடிகர் விஸ்வக் சென் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். பிப்ரவரி 9-ம் தேதி நடந்த லைலா திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழாவில் நடிகர் பிருத்வி பேசிய அரசியல் கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பின.
அவரது பேச்சு, சமீபத்திய ஆந்திரப் பிரதேசத் தேர்தல்களைக் குறிப்பிட்டது. இதனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்தனர். திரைப்படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்தனர்.
நடிகர் விஸ்வக் சென் உணர்ச்சிவசப்பட்டு, பிருத்வியின் கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்டார். மேலும், அவரது கருத்துக்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார்.
ஹைதராபாத்தில் நடந்த விழாவில், லைலா படத்தில் மேகலா சட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிருத்வி, தனது கதாபாத்திரம் மற்றும் இயக்குநருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
ஆனால், கிளைமாக்ஸ் காட்சி குறித்து அவர் பேசிய போது.. ”11 ஆடுகள்” வைத்திருப்பதாகக் கூறினார். இது 2024 தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் இடங்களின் எண்ணிக்கையை மறைமுகமாகக் குறிப்பிடுவதாக அமைந்தது. இந்த பேச்சுக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பை கிளப்பியது.
இதனால்,ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் #BoycottLaila என ஆன்லைனில் ட்ரெண்ட் செய்ய ஆரமித்தனர். சர்ச்சைக்கு பதிலளித்த விஸ்வக் சென், பிருத்வியின் கருத்துக்களுக்கும் தனக்கும் படக்குழுவினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார்.
விழாவின் போது சிரஞ்சீவி அவர்களை வரவேற்க வெளியில் இருந்ததால், என்ன பேசினார்கள் என்று தங்களுக்குத் தெரியாது என்று அவர் கூறினார். உணர்ச்சிவசப்பட்ட நடிகர் விஸ்வக் சென் மேலும் கூறுகையில், “மற்றொருவர் செய்த தவறுக்கு என்னை ஏன் குறை சொல்ல வேண்டும்? நடிகர்கள் மென்மையான இலக்குகளாகிவிட்டோம்.
இந்தப் படத்திற்காக நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம். நாங்கள் கட்டுப்படுத்த முடியாத ஒன்றின் அடிப்படையில் 25,000க்கும் அதிகமான ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து இந்த திரைப்படத்தைப் புறக்கணிக்க போவதாக கூறுகிறார்கள்