தனக்கு மாமியாராக நடித்தவரை திருமணம் செய்த நடிகர்.. ஜோடியாக வெளியிட்ட புகைப்படம்
வெள்ளித்திரையை விட தற்போது சின்னத்திரை சீரியல் பிரபலங்கள் தான் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறார்கள். அப்படி தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் சீரியல் பிரபலங்கள் இந்திரனில் மற்றும் மேகனா ராமி.
ஆம், சீரியலில் மாமியார் மருமகனாக நடித்த இவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர். தெலுங்கில் மிகவும் பிரபலமான சீரியல் சக்ரவாகம்.
இந்த சீரியலில் மருமகன் கதாபாத்திரத்தில் இந்திரனில் நடிக்க, அவருடைய மாமியாராக நடித்திருந்தவர் மேகனா ராமி. இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையில் இணைந்த போது, மாமியாரை திருமணம் செய்த மருமகன் என நிறைய கிண்டல்களை இவர்கள் சந்தித்துள்ளார்களாம்.
இவர்கள் இருவருக்கும் இப்போது 40 வயதிற்கு மேல் ஆகிறது. தற்போது இவர்களுடைய திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.