உனக்கு என்ன உறுத்துது.. ஓரினச்சேர்க்கை.. அதுக்கு கூட அடிச்சிருக்காங்க.. தொகுப்பாளினி ஜாக்லின் பேச்சு..!
தொகுப்பாளினி ஜாக்லின் தன்னுடைய தோழியும் புகைப்பட கலைஞருமான சாரதா என்பவருடன் நெருக்கமாக இருக்கும் செல்ஃபி புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பகிர்ந்து இருப்பார் போல் தெரிகிறது.
அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவரிடம் கோக்கு மாக்கான கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜாக்லினிடம் இப்படி நீங்கள் உங்களுடைய புகைப்பட கலைஞரும் தோழியுமான சாரதாவுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பார்த்து நீங்கள் இருவரும் ஓரினச்சேர்க்கையாளரா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இது குறித்து உங்களுடைய பதில் என்ன…? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ஜாக்லின் இதோ பாருங்கள், இப்படியான கமெண்ட்கள் எல்லாம் நான் பார்க்கும் போது இவ்வளவுதானா நீங்கள்..? இவ்வளவு தான் யோசிப்பீர்களா..? அது ஏன் இவ்வளவு மோசமாக உங்களுடைய பார்வை இருக்கிறது என்று தான் எனக்கு தோன்றும்.
இப்போது மட்டுமல்ல மூன்று தோழிகள் ஒன்றாக நின்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டால் மூன்று பேரும் ஓரினச்செர்கையாளரா..? என்று கேட்பார்கள். இவ்வளவு ஏன் பேட்டி எடுத்துக்கொண்டிருக்கும் நீங்களும், நானும் சேர்ந்து ஒரு புகைப்படம் வெளியிட்ட போதும் இதே போல தான் அடிச்சிருக்காங்க..
இன்னொரு விஷயம் என்னவென்றால் நம்முடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது.. என்று நமக்கே தெரியவில்லை.. அதை நாம் சொல்வதற்கு முன்பே நாம் இப்படித்தான் என்று நமக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் நம்மை பற்றி கூறுவது என்பது எப்படி..?
நாம் யாருடன் சேர்ந்து போட்டோ போட்டால் என்ன உங்களுக்கு என்ன..? உங்களுக்கு ஏன் உறுத்துது..? என்று தான் எனக்கு கேட்க தோன்றும் என பேசி இருக்கிறார் தொகுப்பாளர் நீ ஜாக்குலின்.