மேலாடையை கழட்டி.. ஹோட்டல் அறையில் நடந்த கொடுமை.. அந்த உறுப்பில் வலி.. சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி பகீர் புகார்..!
சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தி தமிழில் பூவே உனக்காக என்ற சீரியலில் பூவரசி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்த இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார்.
இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த இவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை பதிவு செய்திருந்தார். அவர் கூறியதாவது, பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகியதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.
நாம் நடிப்பது பணத்திற்காக தான் ஆனால் அந்த சீரியலில் நடித்ததற்கு எனக்கு சரியாக சம்பளம் தரப்படவில்லை. எந்த சீரியலில் ஆவது ஹீரோயினாக இருக்கும் கதாபாத்திரத்தை வில்லி போல மாற்றுவார்களா..? ஆனால் என் மீது இருந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக என்னுடைய கதாபாத்திரத்தை வில்லத்தனமான கதாபாத்திரமாக மாற்றினார்கள்.
இது தெரியாமலேயே நான் அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் ரசிகர்களிடமிருந்து எதிர்மறையான கருத்துக்கள் வரும்போதுதான் இப்படியாக என்னுடைய கதாபாத்திரத்தை நாசம் செய்து வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்.
படப்பிடிப்பு தளத்தில் உடை மாற்றுவதற்கு கூட சரியான இடம் இருக்காது. இதுதான் அறை இந்த அறையில் சென்று உடைமாற்றி வாருங்கள் என்று கூறுவார்கள். உள்ளே சென்றார் படப்பிடிப்பில் வேலை செய்யக்கூடிய இளைஞர்கள் மேலாடையை கழட்டி போட்டு விட்டு வெறும் பனியனோடு அமர்ந்திருப்பார்கள்.
நாம் உள்ளே சென்றதும்.. எழுந்து சென்று விடுவார்கள் என்று நாம் எதிர்பார்ப்போம். ஆனால், அங்கே இருந்து அவர்கள் நகரவே மாட்டார்கள். அங்கேயே தான் இருப்பார்கள். இது குறித்து படக்குழுவிடம் போய் கேட்டால் பெரிய பெரிய நடிகைகளே இதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. இப்போது தான் நீங்கள் அறிமுக நடிகை இப்போதே நீங்கள் இந்த அளவுக்கு பிரச்சனை செய்கிறீர்கள் என்று என்னை திட்டுவார்கள்.
முக்கியமாக படப்பிடிப்பு நடக்கக்கூடிய இடத்திற்கு அருகே ஒரு வீடு எடுத்து அந்த வீட்டில் என்னை தங்க வைப்பது தான் முதலில் எடுக்கப்பட்ட முடிவு. ஆனால், கடைசிவரை எனக்கு வாடகை வீடு பார்த்துக் கொடுக்கவில்லை. ஹோட்டலிலேயே தான் தங்கி இருந்தேன். படப்பிடிப்பு முடியும் வரை ஹோட்டலில் மட்டுமே தங்கி இருந்தேன். ஒரு நாள் சாப்பாடு நன்றாக இருக்கும்.. மறு நாள் மிகவும் மோசமாக இருக்கும்.. சாப்பிடுவதற்கே கொடுமையாக இருக்கும்.
ஒரு நாள், இரண்டு நாள், ஒரு வாரம் ஹோட்டல் உணவை சாப்பிட்டால் சரி. ஆனால், வருட கணக்கில் ஹோட்டல் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உடம்பு என்ன ஆகும்..? மட்டும் இல்லாமல் படம் பிடிப்பு தளத்தில் பெண்களுக்கு என தனி கழிவறை கிடையாது.
ஆண்கள் பயன்படுத்தக்கூடிய கழிவறையை தான் பயன்படுத்த வேண்டும். இத்தனைக்கும் படப்பிடிப்பு நடந்த வீட்டில் இரண்டு வயதானவர்கள் இருந்தார்கள். அவர்களும் அந்த கழிவறையை தான் பயன்படுத்துவார்கள்.இதனால் எனக்கு சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டு கடுமையான வலி ஏற்பட்டது.
இப்படி பல்வேறு விஷயங்களை அனுசரித்துத்தான் அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் சொல்ல முடியாத அளவுக்கு துன்பங்கள் வர ஆரம்பித்தன. இதனால் அந்த சீரியலில் இருந்து விலகி விட்டேன் என பேசியிருக்கிறார் நடிகை ராதிகா ப்ரீத்தி.