“அது இல்லாத நேரத்துல.. இதை போடுவேன்..” சூத்திரம் உடைத்த பூஜா ஹெக்டே..
நடிகை பூஜா ஹெக்டே சினிமாவில் அறிமுகமான புதிதில் தன்னுடைய தோற்றம் காரணமாகவும் தன்னுடைய ஒல்லியான உடல்வாகு காரணமாகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்.
ஆனாலும் தொடர்ந்து படங்களில் நடிக்கும் முயற்சியை நிறுத்தாமல் செய்து கொண்டே இருந்தார்.
ஒரு கட்டத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், நம்மால் இது முடியாது.. நம்மால் இனிமேல் எதுவும் செய்ய முடியாது… என்ற நம்பிக்கையை ஒருவர் இழக்கும் போது நாம் என்ன செய்ய வேண்டும்..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகை பூஜா ஹெக்டே, இந்த கேள்விக்கு பதில் கொடுப்பதற்கு சரியான ஆள் நான் தான் என்று நினைக்கிறேன். ஏனென்றால், என்னுடைய சினிமா வாழ்க்கையில் நிறைய இடங்களில் நான் என் மீது நம்பிக்கை இழந்து இருக்கிறேன்.
அப்போது என்னுடைய அம்மா சொன்ன விஷயங்கள் என்னுடைய நினைவுக்கு வரும். நம் மீது நம்பிக்கை இழக்கும் பொழுது யார் நம்மை நம்புகிறார்களோ..? அவர்களுடைய நம்பிக்கை மீது நம்முடைய நம்பிக்கையை போட வேண்டும்.
உதாரணமாக, இப்பொழுது எனக்கு என் மீது நம்பிக்கை இல்லை. என்னுடைய பெற்றோர்களோ, நண்பர்களோ, நலம் விரும்பிகளோ என் மீது உன்னால் முடியும் என்று என் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்.. என்றால் அவருடைய நம்பிக்கை மீது என்னுடைய நம்பிக்கையை போடுவேன்… அது தன்னம்பிக்கையை விடவும் அதிக பலம் வாய்ந்தது.. வெற்றிக்கான சூத்திரம் இது.. என பேசி இருக்கிறார் பூஜா ஹெக்டே..