“இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் கொடுமை..” நடிகை ரம்யா கிருஷ்ணன் பகீர் தகவல்..!
நடிகை ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். 80, 90களில் படப்பிடிப்பு தளங்களில் நடிகைகள் சந்தித்த இன்னல்களை அவர் விவரித்துள்ளார்.
அவர் பேசுகையில், “தற்போது படப்பிடிப்பு தளங்களில் கேரவன் வசதி உள்ளது. அதில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. ஆனால், 80, 90களில் கேரவன் என்ற ஒன்றே கிடையாது. படப்பிடிப்புக்கு செல்லும் ஊர்களில் நாம் தங்குகின்ற ஹோட்டல் அல்லது வீடுதான் நமக்கு கிடைக்கும்.
சில நேரம் நாம் தங்கி இருக்கும் இடத்திற்கு மிகவும் தொலைவில் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கும். அப்படியான நேரங்களில் உடை மாற்றுவதில் இருந்து இயற்கை உபாதை கழிப்பது வரை நடிகைகளுக்கு ஒரு மோசமான கட்டம் தான்,” என்று கூறினார்.
நடிகர்களின் நிலை குறித்து அவர் கூறுகையில், “நடிகர்கள் பொது வெளியில் சட்டையை கழட்டி மாற்ற முடியும். அவர்களுக்கு இயற்கை உபாதை கழிப்பது என்பது பெரிய சங்கடமான விஷயமாக இருக்காது. கஷ்டம் தான் ஆனாலும் பெண்கள் அளவுக்கு அவர்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது,” என்று தெரிவித்தார்.
தனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை அவர் விவரித்தார். “ஒருமுறை படப்பிடிப்பு தளத்திற்காக காட்டுப்பகுதி ஒன்றுக்கு எங்களை அழைத்துச் சென்றார்கள். ஒரு பாடல் காட்சி படமாக வேண்டியதாக இருந்தது. அந்த இடத்தில் நானும் கலா மாஸ்டரும் சென்றிருந்தோம்.
அங்கே சாப்பிட்ட உணவு மற்றும் அதிகபட்ச வெயில் காரணமாக எனக்கு லூஸ் மோஷன் ஏற்பட்டது. சுற்றிலும் எப்படி பார்த்தாலும் 100 ஆண்கள் இருப்பார்கள். பாத்ரூம் கூட இல்லை. படப்பிடிப்பு தளத்திலிருந்து குறைந்தபட்சம் 500 மீட்டர் தாண்டி சென்றால்தான் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி இருக்கும். ஏனென்றால் படப்பிடிப்பு நடப்பதால் சுற்றிலும் ஆட்கள் இருக்கிறார்கள். எந்த பக்கம் சென்றாலும் ஆட்கள் இருக்கிறார்கள்.
என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த நேரத்தில் கலா மாஸ்டருக்கும் லூஸ் மோஷன் ஏற்பட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் காட்டுப்பகுதிக்குள் நானும் கலா மாஸ்டரும் ஓடினோம். கிட்டத்தட்ட ஒரு 500, 700 மீட்டர் ஓடி இருப்போம் எங்கு திரும்பினாலும் ஆட்கள் இருக்கிறார்கள்.. ஒரே கொடுமையாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு இடத்தை கண்டறிந்து எங்களுடைய பிரச்சனை சரி செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது,” என்று கூறினார்.
“ஆனால் தற்போது இருக்கும் நடிகைகளுக்கு இப்படியான பிரச்சினைகள் எதுவும் இல்லை,” என்று ரம்யா கிருஷ்ணன் தெரிவித்தார்.
ரம்யா கிருஷ்ணன் லூஸ் மோஷன் என்று சொன்னதை மட்டும் எடிட் பண்ணி போடுங்க என்று சமாளித்தார். அதற்கு கேபிஒய் பாலா, “கவலைப்படாதீங்க மேடம்.. நீங்க லூஸ் மோஷன் என சொன்னதை ஸ்லோ மோஷனில் போட்டு ப்ரோமோஷன் பண்றோம்,” என்று கலாய்த்தார்.
துணை நடிகைகள் பலரும் ரம்யா கிருஷ்ணன் சொன்ன அந்த பிரச்சனை தங்களுக்கு இருப்பதாக கூறி இருக்கின்றனர். முன்னணி கதாபாத்திரங்களுக்கு மட்டும் தான் கேரவன் வசதி இருக்கிறது. துணை நடிகைகளுக்கு சரியான வசதிகள் செய்து கொடுப்பது கிடையாது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்த இந்த அனுபவம் 80, 90களில் படப்பிடிப்பு தளங்களில் நடிகைகள் சந்தித்த இன்னல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தற்போதைய தலைமுறை நடிகைகளுக்கு பல வசதிகள் இருந்தாலும், துணை நடிகைகள் இன்னமும் இதுபோன்ற பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர் என்பது வேதனை அளிக்கிறது.