இது என்ன கூத்து..? அதை மட்டும் போட்டு கிட்டு.. சாய் பல்லவி..! ஆளே மாறிட்டாங்களே.. அதிரும் இண்டர்நெட்..!
இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படத்தில் ஹீரோயினாக ஷாலினி பாண்டே நடித்திருந்தார். ஆனால் இந்த திரைப்படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது சாய் பல்லவி தானாம்.
சாய் பல்லவி சினிமாவில் வருவதற்கு முன்பு பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அப்படி ஒரு முறை நடனம் ஒன்றில் படு கிளாமரான ஆடை அணிந்து கொண்டு ஆடி இருந்தார்.
ஆனால் அந்த நேரத்தில் நடிகை சாய் பல்லவி படுமோசமான ஆடை அணிந்திருக்கிறார் என்று இணைய பக்கங்களில் புகைப்படங்கள் பரவின. சாய் பல்லவி என்று ரசிகர்கள் பலரும் வாயைப் பிளந்தனர்.
காரணம் அந்த பாடலின் வீடியோவில் நடிகை சாய் பல்லவியின் அங்கங்களை மட்டும் போகஸ் செய்வது போல புகைப்படங்களை எடுத்து இணைய பக்கங்களில் பரவ விட்டிருந்தனர் சில ஆசாமிகள்.
இதனை நடிகை சாய் பல்லவியே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இதனால் தான் இனிமேல் நான் கவர்ச்சியான ஆடைகளை அணிவதில்லை என்று முடிவை எடுத்திருப்பதாக கூறினார்.
அந்த நேரத்தில் தான் அர்ஜுன் ரெட்டி பட வாய்ப்பு வந்திருக்கிறது. அதில் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து கொண்டு நடிக்க மாட்டேன் என தவிர்த்து இருக்கிறார் நடிகை சாய் பல்லவி.
சாய் பல்லவியின் இந்த முடிவு அவரது கொள்கை பிடிப்பையும், தைரியத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்நிலையில், அர்ஜுன் ரெட்டி பட இயக்குனரை, சாய்பல்லவியின் மேலாளர் தொடர்பு கொண்டு சார் மேடம் ஸ்லீவ் லெஸ் டிரெஸ் எல்லாம் போட்டுக்கிட்டு நடிக்க மாட்டாங்க. அதனால் அவர்களை இந்த படத்தில் நடிக்க வைக்கலாம் என்பதை மறந்து விடுங்கள் சார் அவங்க ஆளே மாறிட்டாங்க என்று கூறியிருக்கிறார்.
இதில் கூத்து என்ன என்றால்.. அதன் பிறகு நடிகை சாய் பல்லவி நிறைய படங்களில் ஸ்லீவ்லெஸ் உடையை அணிந்து கொண்டு நடித்துள்ளார். பொதுவெளியிலும் தோன்றியுள்ளார். ஆனால், அர்ஜுன் ரெட்டி படத்தில் ஸ்லீவ்லெஸ் போட்டு நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
எனவே, சாய் பல்லவி அர்ஜுன் ரெட்டி படத்தை மறுத்ததற்கு பின்னால் வேறு எதோ வலுவான காரணம் இருந்திருக்க வேண்டும்.