“கூச்சத்தை விட்டு.. நேரடியாக நானே அந்த நடிகரிடம் இதுக்கு ட்ரை பண்ணேன்..” ஆனால்.. நயன்தாரா பேச்சு..!
நடிகை நயன்தாராவின் திருமணம் குறித்து ஆவணப்படம் வெளியானது. இதற்கு பின்னால் எழுந்த சர்ச்சைகள் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இந்த திருமண ஆவணப் படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்திக் கொள்ள நடிகர் தனுஷ் மறுத்ததும் அதற்கு நடிகை நயன்தாரா அறிக்கையை வெளியிட்டு நடிகர் தனுஷ் கடுமையாக விமர்சித்ததும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை நயன்தாரா இதற்கு பின்னால் என்ன நடந்தது…? என்று என்பது குறித்து தன்னுடைய தரப்பு விளக்கத்தை கொடுத்து இருக்கிறார்.
அவர் கூறியதாவது, நான் தனிப்பட்ட முறையில், நேர்மையான முறையில் தனுஷ் செய் தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். என்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் தனுஷின் மேனேஜரை தொடர்பு கொண்டார்.
அதன் பிறகு தனுஷுக்கும் எங்களுக்கும் நண்பர்களாக இருக்கக்கூடிய நபர்களை முன்னிறுத்தி தனுஷை தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். ஆனால் தனுஷ் தரப்பில் இருந்து எங்களுக்கு கொடுத்த பதில் முடியாது என்பதுதான்.
ஒரு கட்டத்தில் கூச்சத்தை விட்டு.. நானே நேரடியாக தனுஷை தொடர்பு கொண்டு ஏன் N.O.C., கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள் என்பதற்கு உண்டான பதிலை பெற முயற்சி செய்தேன். ஆனால், எந்த இடத்திலும் தனுஷ் அதற்கான பதிலை இதுவரை கொடுக்கவில்லை என கூறியுள்ளார் நயன்தாரா.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து வலைப்பேச்சு அந்தணன் கூறிய ஒரு தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் கூறியதாவது, எடுத்தவுடனே நடிகர் தனுஷிடம் நேரடியாக இந்த காட்சிக்கான அனுமதியை கேட்டிருந்தால் கண்டிப்பாக கொடுத்திருப்பார். ஆனால், தனுஷிடம் கேட்காமல் தனுஷின் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் செய்த திருட்டு வேலை தான் நடிகர் தனுஷை கடுப்பாகிவிட்டது.
விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பின் போது தனுஷ் உடன் மனக்கசப்பில் இருந்திருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் படத்தின் பட்ஜெட் சொன்னதை விடவும் மூன்று மடங்குக்கு மேல் அதிகமாக செலவு செய்திருக்கிறார்கள் என்பது தான்.
இதனால் கடுப்பான தனுஷ் ஒரு கட்டத்தில் இனிமேல் பணம் கொடுக்க மாட்டேன் படத்தை ட்ராப் செய்கிறேன் என்ற நிலைக்கு வந்திருக்கிறார். நானும் ரவுடிதான் படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் தான் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதல் வயப்பட்டு இருக்கிறார்கள்.
படப்பிடிப்பு உடனே முடிந்து விட்டால் தொடர்ந்து நயன்தாராவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமே என்று பயந்த விக்னேஷ் சிவன் ஏற்கனவே எடுத்த காட்சிகளையே மெருகேற்றுகிறேன் என்ற பெயரில் திரும்பத் திரும்ப படப்பிடிப்பு செய்து பட்ஜெட்டை எகிற வைத்திருக்கிறார்.
இதற்கு முக்கிய காரணம் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலிப்பது தான் என்று நடிகர் தனுஷுக்கு படக்குழு தரப்பிலிருந்து தகவல் சென்று இருக்கிறது. இதனால் கடுப்பாகி இருக்கிறார் தனுஷ். விக்னேஷ் இவனும் நயன்தாராவும் காதலிப்பது பிரச்சனை கிடையாது. அதற்கு இவருடைய பணத்தை பயன்படுத்திக் கொண்டு இவருடைய படத்தின் பட்ஜெட்டை ஏற்றி கொண்டே போவதால் தனுஷ் கடுப்பாகி இருக்கிறார்.
இதனால் தான் ஒரு கட்டத்தில் இனிமேல் படம் எடுக்க வேண்டாம். படத்தை ட்ராப் செய்கிறேன் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் நடிகர் தனுஷ். கடைசியாக விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தங்களுடைய சொந்த பணத்தை போட்டு படத்தை முடித்து இருக்கிறார்கள்.
இப்படி தனுசுக்கும், விக்னேஷ் சிவன் நயன்தாராவு ஜோடிக்கும் இடையே படப்பிடிப்பின் போதே சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நேரடியாக அந்த படத்தின் காட்சிகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டால் தனுஷ் கொடுக்க மாட்டார் என்று நினைத்துக் கொண்டு இவர்கள் தனுஷின் மேனேஜர் ஒருவரிடம் வொண்டர் பார் நிறுவனத்தின் இமெயில் முகவரியில் இருந்து N.O.C., கடிதத்தை அனுப்பி விடுமாறு தனுஷின் அறிவுக்கு இந்த விஷயத்தை கொண்டு செல்லாமலேயே திருட்டுத்தனமாக இந்த N.O.C., கடிதத்தை பெற முயற்சி செய்திருக்கிறார்கள்.
ஆனால், தனுஷின் மேனேஜர் அப்படியெல்லாம் கொடுக்க முடியாது. இது தயாரிப்பு நிறுவனம் சம்பந்தப்பட்டது. தனுஷ் சார் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று உடனே தனுஷ் இடம் இந்த விஷயத்தை கூறிவிட்டார்.
நேரடியாக என்னிடம் அனுமதி கேட்காமல் இப்படி திருட்டுத்தனமாக என்னுடைய மேனேஜர் மூலம் அனுமதி பெற முயற்சி செய்கிறீர்களா..? என்று கடுப்பான தனுஷ் அதன் பிறகு யாரை வைத்து பேசியும் மசியவில்லை.
இந்த காட்சியை பயன்படுத்த அனுமதி கொடுக்கவே மாட்டேன் என விடாப்பிடியாக இருந்து விட்டார். அந்தப் படத்தில் தயாரிப்பு செலவுகளை சரி கட்டவே 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் நடிகர் தனுஷ் என்று வலைப்பேச்சு அந்தணன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.