சாக்ஷி அகர்வாலுக்காக காதல் கணவர் 3 நாளில் செய்த செயல்!! என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்திருந்தாலும் குறிப்பிட்ட படங்களால் மக்களிடம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸில் கலந்தகொண்ட பிறகு ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் ஆனார்.
பிக்பாஸ் முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், திடிரென திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் தன் காதல் கணவர் வாங்கிக்கொடுத்த புதிய பிளாட் பற்றிய ரகசியத்தை பகிர்ந்துள்ளார். நாங்கள் வாங்கிய இந்த வீட்டை, 3 நாட்களில் பார்த்து வாங்கிவிட்டோம்.
ஒரு டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருக்கும் போது அதன் எதிர்ப்பக்கம் இருக்கும் ஒரு வீட்டை பார்த்து இதுபோல் வாங்க வேண்டும் என்று கூறினேன்.
உடனே அதற்காக வீட்டு கடன் வாங்கி எனக்கான பரிசாக 3 நாட்களில் வாங்கி கொடுத்துவிட்டார். திருமணத்திற்கு முன் இது நடந்தது, அதை என் பெயரிலேயே வாங்கிவிட்டார் என் கணவர் என்று நடிகை சாக்ஷி அகர்வால் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.