அவரை தான் காதலிக்கிறேன்.. காதலர் குறித்து ராஷ்மிகா ஓபன்
இந்திய சினிமா கொண்டாடும் நாயகியாக National Crush என மக்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தற்போது கலக்கி வருகிறார்.
சமீபத்தில் ராஷ்மிகா ஜிம்மில் ஒர்கவுட் செய்யும்போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் தற்போது அவர் ஓய்வில் இருந்து வருகிறார்.
நடிகை ராஷ்மிகா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் காதலில் இருந்து வரும் நிலையில், அதனை உறுதி செய்யும் விதமாக இவர்கள் ஒன்றாக சுற்றி வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் உலா வருவதை நம்மால் காண முடிகிறது.
இந்நிலையில், ராஷ்மிகா ஒரு மாத இதழுக்கு அளித்த பேட்டியில் கூறிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், "எனக்கு கிடைத்து இருக்கும் வாழ்க்கையை நான் மதிக்கிறேன்.
நான் எப்போதும் சிரித்த முகத்துடன் தான் இருப்பேன். அதே போல சிரித்த முகத்துடன் இருப்பவர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
மேலும் உடன் இருக்கும் எல்லோரையும் மதிப்பவராக அவர் இருக்க வேண்டும். அது போன்ற ஒரு நபரை தான் நான் காதலிக்கிறேன்" என்று கூறியுள்ளார். இதன் மூலம் அவர் காதலில் இருப்பதாக ஒப்புக்கொண்டு இருக்கிறார்.