பாக்யலட்சுமி அமிர்தாவா இது!! ஜோடி ஆர் யூ ரெடியில் இப்படியொரு ஆட்டம் போட்டு இருக்காங்க...
விஜய் டிவியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் பாக்யலட்சுமி சீரியலில் பாக்யவின் மருமகளாக நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தவர் நடிகை அக்ஷிதா அசோக்.
சீரியலில் அடக்கவுடக்கமாக நடித்து வரும் அக்ஷிதா இணையத்தில் ஆக்டிவாக இருந்து நடன வீடியோக்களை பகிர்ந்து வருவார். அதன் பயனாக விஜய் டிவி சேனலிலேயே ஆரம்பித்துள்ள ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஜோடி நிகழ்ச்சியின் முதல் அறிமுக எபிசோட்டில் கவர்ச்சிகரமாக ஆட்டம் போட்டு பாக்யலட்சுமி மருமகள் அமிர்தாவா இது என்று வாய் பிளந்து கேட்டும் அளவிறு மாறிட்டாங்களே என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.