“எல்லாமே வெளிய தெரியுது.. வேற வழியே இல்ல..” சீரியல் நடிகை சரண்யா வேற லெவல்..!
பிரபல சீரியல் நடிகை சரண்யா எனக்கு திருமணம் ஆன விஷயம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார். பலரும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அது உண்மை கிடையாது.
இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் நடிகை சரண்யா 18 வயது பெண் போன்ற தோற்றத்திலேயே இளமையுடன் இருப்பது தான். சீரியல்கள் இன்ஸ்டாகிராம் என அனைத்துமே தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இவர் அதிகமாக பகிர்ந்தது கிடையாது.
தனியாக இருக்கும் புகைப்படத்தை மட்டுமே பகிர்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். இதன் காரணமாக இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று பலரும் நினைந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், இந்த கேள்விக்கு சரண்யா துராடிபேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதனால் என்னுடைய திருமணத்தை நான் பொதுவெளியில் பிரபலப்படுத்த விரும்பவில்லை என்பதை கூறியிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது, நான் ஒரு நடிகை என்பது ஒரு பக்கம். ஆனால், ஒரு குடும்ப தலைவியாக சீரியல் வேறு என்னுடைய குடும்ப வாழ்க்கை வேறு என்பதை நான் தனித்து பார்க்க விரும்புகிறேன்.
ஏனென்றால் ஒரு நட்சத்திரமாக இருக்கும் போது நான் என்ன செய்தாலும் வெளியே தெரிந்து விடுகிறது. வேறு வழியே இல்லை. ஆனாலும், நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. அது நமக்கு தேவையும் கிடையாது.
அதனால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை சமூக வலைதளங்களில் இருந்து தனிமைப்பட்டு தான் நான் விரும்புகிறேன். அது என்னுடைய தனி மனித உரிமையாக நான் கருதுகிறேன்.
எல்லாவற்றையும் மீடியாவில் சொல்ல வேண்டும் என்று அவசியம் கிடையாது. இதற்காக நான் என்னுடைய ரசிகர்களை என்னை பின்தொடர்பவர்களை நான் அவமதிக்கிறேன் என்று அர்த்தம் கிடையாது.
நான் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை என்னோட குடும்பம் வாழ்க்கை மீது அளப்பரிய மரியாதை வைத்திருக்கிறேன் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.
இதுதான் நான் என்னுடைய தனிப்பட்ட திருமணம் குடும்பம் சார்ந்த விஷயங்களை பொதுவெளியில் வைக்காமல் இருப்பதற்கு காரணம் என பதிவு செய்திருக்கிறார் நடிகை சரண்யா துராடி. இவருடைய அந்த பேச்சுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றது.