மறுமணம்..! மாப்பிள்ளை யார்..? தொகுப்பாளினி திவ்யதர்ஷினி கூறிய தகவல்..!
தொகுப்பாளினி திவ்யதர்ஷினி முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். முன்னணி பிரபலங்களின் பேட்டி என்றாலே அங்கே திவ்யதர்ஷினி தான் தொகுப்பாளனாக இருந்து வருகிறார்.
இதற்கு காரணம் இவர் தொகுத்து வழங்கக்கூடிய நிகழ்ச்சியில் எந்த சர்ச்சையான கேள்வியையும் எழுப்ப மாட்டார். அதே போல பிரபலத்தின் மனநிலை என்ன என்பதை புரிந்து அதற்கு ஏற்றார் போல நிகழ்ச்சியை நடத்தி செல்லக்கூடிய திறமை பெற்றவர் திவ்யதர்ஷினி.
மட்டுமில்லாமல் இவருடைய நிகழ்ச்சி கலகலப்பாகவும் இருக்கும். தொகுப்பாளினியாகவும் நடிகையாகவும் ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய படிப்பையும் கைவிடாமல் பகுதிநேர ஆசிரியராக கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார்.
பல திறமைகளை உள்ளடக்கிய திவ்யதர்ஷினி தற்போது பெரும் புகழுடன் இருக்கிறார். ஆனால், இவருடைய திருமண வாழ்க்கை என்பது இவருக்கு சிறப்பாக அமையவில்லை. ஒரே வருடத்திற்குள் முடிவுக்கு வந்துவிட்டது. இது ரசிகர்களை அதிருப்திக்குள் ஆக்கியது.
ஆனாலும் மனம் தளராமல் இருக்கும் டிடி தொடர்ந்து தன்னுடைய வேலைகளை படுஜோராக செய்து வருகிறார். சமீபத்திய, பேட்டி ஒன்றில் பேசிய அவர் 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் பற்றிய என்னுடைய எண்ணம் வேறு விதமாக உள்ளது.
ஆனால் இப்போது திருமணத்தின் மீதான பார்வை முற்றிலும் வேறாக இருக்கிறது. திருமணம் செய்தால் தான் சாதனை செய்தது போன்றெல்லாம் சொல்ல முடியாது. திருமணம் என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று கூறியிருக்கிறார்.
மேலும் திவ்யதர்ஷினி தனிமையில் இருப்பதால் அவருடைய அம்மா மற்றும் குடும்பம் எவ்வாறு பார்க்கிறார்கள் என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டிருந்தார்.
இப்போது உள்ள காலகட்டத்திற்கு ஏற்றார் போல என்னுடைய குடும்பத்தினர் யோசிக்கிறார்கள். என்னுடைய தம்பி வெளிநாட்டில் இருக்கிறான். இங்கு என்ன நடக்கிறது என்று அவனுக்கு தெரியாது.
அதேபோல என்னுடைய அக்கா பிரியதர்ஷினிக்கும் என்னைப் பற்றி எனக்கு தெரியும். உங்களுடைய இரண்டாம் திருமணம் எப்போது.. மாப்பிள்ளை யார் என்ற கேள்விக்கு மறுமணம் செய்ய எனக்கு விருப்பம் இல்லை.. பிறகு எங்கே மாப்பிள்ளை யார் என சொல்வது என டிடி கூறி இருக்கிறார்.