நரக வேதனை..! வடிவேலு கூட நடிக்க அதை பண்ணனும்.. நானே அனுவச்சிருக்கேன்.. கோவா சரளா ஓப்பன் டாக்..!

நரக வேதனை..! வடிவேலு கூட நடிக்க அதை பண்ணனும்.. நானே அனுவச்சிருக்கேன்.. கோவா சரளா ஓப்பன் டாக்..!

பிரபல காமெடி நடிகை கோவை சரளா நடிகர் வடிவேலு குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.

தமிழ் சினிமா உலகில் அசைக்க முடியாத ஒரு காமெடி நடிகர் இருப்பார் என்றால் அது நடிகர் வடிவேலு என்று கூறலாம். மிகப்பெரிய காமெடி ஜாம்பவான். வருடத்திற்கு 20,25 படங்கள் என பம்பரமாய் சுற்றிக் கொண்டிருந்தார் வடிவேலு.

ஆனால், சில அரசியல் தலையீடு காரணமாக சினிமாவில் இருந்து முற்றிலுமாக ஓரம் கட்டப்பட்டார். இடையில் தன்னுடைய சொந்த பணத்தை போட்டு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். அவரால் தொடர்ச்சியாக படங்களில் நடிக்க முடியவில்லை. நடிகராக மட்டுமே இருந்த வடிவேலு அப்படியே இருந்திருக்க வேண்டும்.

இவருடைய அரசியல் நுழைவு என்பது தேவையற்ற ஒன்றாக மாறிவிட்டது. ரசிகர்கள் மத்தியில் வடிவேலுவுக்கு உண்டான வண்ணம்.. அவர் மீதான அந்த இணக்கம் என்பது குறைந்துவிட்டது.

ஆனால், தற்போதும் மிகப்பெரிய மீம் மெட்டீரியலாக சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறார் வடிவேலு. இவரைப் பற்றிய அவ்வப்போது மோசமான குற்றச்சாட்டுகளும் வருவதுண்டு.

வடிவேலுவுடன் நடிக்க வேண்டும் என்றால் அவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் தகவல்கள் இணைய பக்கங்களில் பறவி கிடைக்கின்றன. குறிப்பாக பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் வடிவேலு போற்றி மோசமான தன்னுடைய அனுபவத்தை பதிவு செய்திருந்தார்.

நடிகர் வடிவேலு தன்னுடன் நடிக்கும் நடிகைகளை அனுபவிப்பதற்காகவே தனியாக பண்ணை வீடு வைத்திருக்கிறார் என்று கூறியிருந்தார். அந்த சர்ச்கையை எல்லாம் தாண்டி நடிகர் வடிவேலு தற்போது பிரபலமாக இருக்கிறார்.

இந்நிலையில் பிரபல நடிகை கோவை சரளா வடிவேலு குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார். பல்வேறு திரைப்படங்களில் நடிகர் வடிவேலுவுடன் காமெடி நடிகையாகவும்.. அவருக்கு ஜோடியாகவும் நடித்து கலக்கியிருக்கிறார் நடிகை கோவை சரளா.

அவர் கூறியதாவது, வடிவேலு பற்றி என்னென்னமோ தகவல்கள் இணையத்தில் வைரலாகின்றன. அதைப் பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. நான் சொல்லக்கூடிய இந்த மேட்டர் மட்டும் 100% உண்மை.

அவருடன் ஒரு காமெடி காட்சி நடிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக அந்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க வேண்டும். ஒத்திகை பார்க்காமல் நேரடியாக கேமரா முன்பு நடிகை சென்று விட்டால் அந்த காட்சி சொதப்பிவிடும்.

ஏனென்றால், அவர் அந்த படப்பிடிப்பு தளத்தில் ஆன் ஸ்பாட்டில் செய்யக்கூடிய காமெடியை கேட்ட பிறகு நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது. சிரிப்பை அடக்கி கொண்டு நடித்தால் கேமராவில் தெரிந்து விடும்.

அதனால் காட்சி என்ன..? எப்படி வரப்போகிறது..? என்பதை முன்கூட்டியே ஒத்திகை பார்த்து விடுவோம். அதனால் படப்பிடிப்பு தளத்தில் அடுத்த அவர் என்ன செய்யப் போகிறார் என்பது நமக்கு தெரிந்துவிடும். நாம் எப்படி நடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒரு வேளை ஒத்திகை பார்க்காமல் செல்லும்போது ஆன் ஸ்பாட்டில் குபீரென சிரித்து விடுவோம். காட்சி சொதப்பிவிடும்.

அதனால் கண்டிப்பாக ஒத்திகை பார்க்க வேண்டும். இப்படி ஒத்திகை பார்க்காமல் நடித்து பல டேக்குகள் வாங்கி கூட.. சில காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட்டு இருக்கிறது.

அப்போது எல்லாம் நரக வேதனையாக இருக்கும். அந்த அளவுக்கு சூட்டிங் ஸ்பாட் அதிரும் அளவுக்கு அவருடைய டைமிங் காமெடிகள் இருக்கும். ஒரு டேக்கில் ஒரு டயலாக் சொல்லுவார். அடுத்த டேக்கிலும் அதைத்தான் சொல்வார் என்று எதிர்பார்ப்போம். ஆனால் அங்கே புதிதாக ஏதாவது ஒன்று சொல்லிவிடுவார்.. குபீரென சிரிப்பு வந்துவிடும்.

இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் சண்டை காட்சிகள். ஏனென்றால், படங்களில் எனக்கும் வடிவேலுக்கும் கைகலப்பு ஏற்படுவது போலவும், சண்டை வருவது போலவும் நிறைய காட்சிகள் இருக்கும்.

அந்த காட்சிகள் எல்லாம் நாங்கள் முறையாக ஒத்திகை பார்ப்போம். ஏன் என்றால் நான் ஒரு பக்கம் அடிக்க போய் அவர் ஒரு பக்கம் திரும்பி விட்டார் அது வில்லங்கமாகிவிடும்.

யாராவது ஒருத்தருக்கு அடிபட்டு விடும். இதனால் முறையாக பயிற்சி எடுத்து நீங்கள் இப்படித்தான் வரவேண்டும் நான் இப்படித்தான் வருவேன் நான் இப்படித்தான் அடிப்பேன் என்றெல்லாம் தெளிவாக பேசி வைத்துக் கொள்வோம்.

ஒரு முறை பேசி வைத்தது போல இல்லாமல் வடிவேலு தவறாக திரும்பி விட்டார். அதனால், அவருடைய வயிற்றில் கடுமையான அடிபட்டுவிட்டது. நன்றாக உதைத்து விட்டேன். நான் உதைக்கும் நேரத்தில் அவர் ஒரு பக்கம் திரும்ப வேண்டும்.. ஆனால் வேறுபக்கம் திரும்பியதால் அவருடைய வயிற்றில் அடிபட்டு விட்டது.

அதனால் வலியால் துடித்தார். பிறகு, நானும் அவரிடம் மன்னிப்பு கேட்டேன். சரிமா ஒன்னும் பிரச்சனை இல்ல.. நான் தான் தப்பா திரும்பிட்டேன்.. ஒன்னும் இல்ல சரியாயிடும் விடு.. என்று சொன்னார் என கூறி இருக்கிறார் நடிகை கோவை சரளா.

LATEST News

Trending News