வீட்டிற்கு அனுப்பவில்லை!! அழுகையே வந்துவிட்டது.. மணிரத்னம் இப்படி பட்டவரா? நடிகை ஓபன்
திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷோபனா. தெலுங்கு, மலையாளம், தமிழ், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
இவர் தமிழில் வெளிவந்த தளபதி, எனக்குள் ஒருவன், இது நம்ம ஆளு, சிவா, எங்கிட்ட மோதாதே, மல்லுவேட்டி மைனர், போடா போடி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
கடைசியாக தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கோச்சடையான் படத்திலும் நடித்திருந்தார். அதன்பின் தமிழில் தலைகாட்டாத நடிகை ஷோபனா, கடந்த 2020ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த Varane Avashyamund என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், தளபதி படத்தின் போது மணிரத்னம் தன்னை அழவைத்து விட்டார் என்று ஷோபனா பேட்டி ஒன்றில் கூறிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
அதில், " நான் தளபதி படத்தில் நடிக்கும்போது எனக்கு வயது 20 மட்டுமே. மலையாள சினிமாவில் ஒரு படத்தை வெறும் 20 நாட்களில் எடுத்து முடித்து விடுவார்கள்.
ஆனால், தளபதி படத்தின் சூட்டிங்கை என்னுடைய கால்ஷீட்டை தாண்டி மணிரத்னம் எடுத்து கொண்டிருந்தார். படத்தின் ஷூட்டிங் காரணமாக என்னை வீட்டிற்கு கூட அனுப்பாமல் தொடர்ந்து இரு தினங்கள் அலைகழித்தார். இதனால் எனக்கு ஒரு கட்டத்தில் அழுகையே வந்துவிட்டது" என்று கூறியுள்ளார்.