மாம்பழம் மேல வெள்ளை கஞ்சி.. கீர்த்தி சுரேஷ் ஹனிமூன்.. இறுதியில் நடந்த சோகம்.!
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடித்த கையோடு தேன் நிலவுக்கு கூட செல்லாமல் தான் நடித்த முதல் பாலிவுட் திரைப்படமான பேபி ஜான் என்ற படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மஞ்சள் தாலி சகிதமாக தோன்றியிருந்த நடிகை கீர்த்தி சுரேஷை பலரும் விமர்சித்தனர்.
திருமணம் முடிந்த கையோட தேனிலவுக்கு கூட செல்லாமல் படத்தின் ப்ரோமோஷன் வந்திருக்கிறீர்கள்.. அதிலும் கவர்ச்சியான ஆடை அணிந்து கொண்டு முன்னழகில் முக்கால் வாசி தெரிய மஞ்சள் தாலியை போட்டுக்கொண்டு வந்து இருக்கிறீர்கள்.. தாலியை அவமதிக்கிறீர்களா..? என்றெல்லாம் கூட கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தனர்.
இது ஒரு பக்கம் இருக்க நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தேன் நிலவுக்கு சென்றிருக்கிறார்.
அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை இணையத்தில் பதிவிட்டு தங்களுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஆனால், கடைசி நடந்த விஷயம் தான் ரசிகர்களைசோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தன்னுடைய கணவருடன் ஊர் சுற்றிய நடிகை கீர்த்தி சுரேஷ் பல வகையான உணவுகளை புசித்து மகிழ்ந்திருக்கிறார்.
அந்த உணவுகளை எல்லாம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அதிலும் குறிப்பாக Mango Stickey Rice என்ற மாம்பழ சாதம் சாப்பிட்டு இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
அதனுடைய புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார். மாம்பழ சாதம் என்பது சாதம், மாம்பழம் மற்றும் தேங்காய்ப்பால் கொண்டு தயாரிக்கப்படும் வெள்ளை நிறத்தினால் ஆன கஞ்சியுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய ஒரு உணவு.
இது தாய்லாந்தில் தாய்லாந்தின் பிரபலமான உணவுகளில் ஒன்று. இந்த உணவைப் புசித்து தன்னுடைய கணவருடன் தேனிலவு கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ் கடைசியாக கடுமையான காய்ச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்.
அந்த புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கீர்த்தி சுரேஷ் காய்ச்சல் காரணமாக படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், உடம்பை பாத்துக்கோங்க கீர்த்தி என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.