“என் கூட இருப்பவர்களே என்னுடைய அந்த உறுப்பை..” கண் கலங்கிய அபிராமி..! ரசிகர்கள் ஷாக்..!
பிரபல நடிகை அபிராமி வெங்கடாச்சலம் சமீபத்திய பேட்டி ஒன்றியத்தில் பாடி ஷேமிங் குறித்து தன்னுடைய அனுபவத்தை பதிவு செய்திருந்தார். மாடல் அழகியான அபிராமி வெங்கடாசலம் விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமான இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பிடும்படியாக நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பையும் அறிமுகத்தையும் பெற்றுக் கொடுத்தது.
தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் பிக் பாஸ் அபிராமி. ரசிகர்கள் பலருக்கும் அபிராமி வெங்கடாஜலம் என்பதை விடவும் பிக்பாஸ் அபிராமி என்று கூறினால் தான் டக்கென என நினைவுக்கு வரும்.
தற்போது சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், சமீபத்திய தனியார் ஊடக பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் பாடி ஷேமிங் குறித்து பேசினார்.
அவர் பேசியதாவது, பாடி ஷேமிங் என்பது எல்லோருக்கும் நடக்கும். அழகாக இருப்பவருக்கும் நடக்கும்.. குண்டாக இருப்பவருக்கும் நடக்கும்.. ஒல்லியாக இருப்பவருக்கும் நடக்கும்..
குண்டாக இருந்தால் என்ன இந்த பொண்ணை இவ்வளவு குண்டா இருக்கு என்று கேவலமாக பேசுவார்கள்.. ஒல்லியாக இருந்தால் பாருப்பா.. இந்த பொண்ணு எவ்வளவு ஒல்லியா இருக்கு ஒன்னுமே இல்லை என்று மோசமாக விமர்சனம் செய்வார்கள்.
எப்படி இருந்தாலும் பாடி ஷேமிங் என்பது நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு புகைப்படம் வெளியிடும்போது எப்படி என்னுடைய உறுப்புகளை மோசமாக வர்ணித்து கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என்பதை பார்த்து இருக்கிறேன்.
இவ்வளவு ஏன்… என் உடன் இருப்பவர்களே போலியான ஒரு கணக்கை தொடங்கி என்னுடைய புகைப்படங்களுக்கு மோசமான கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்கள்.
இதை சொன்னால் நீங்கள் நம்புவீர்களா..? நம்ப மாட்டீர்களா..? என்று கூட எனக்கு தெரியவில்லை.
ஆனால் என் உடன் இருந்தவர்களே என்னுடைய உறுப்புகளை மோசமாக வர்ணித்து கமெண்ட்களை எழுதி இருக்கிறார்கள்.
இதனை நான் என்னுடைய நம்பிக்கைக்கு உரியவர்கள் மூலம் தெரிந்து கொண்டு உறுதிப்படுத்தி இருக்கிறேன் என்று கண்கலங்கி இருக்கிறார்.
இவருடைய அந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.