“அவர் கொடுத்த அந்த வலி..” எல்லோரும் நினைக்கிற மாதிரி இல்ல.. நடிகை பாவனா கண்ணீர்..!
நடிகை பாவனா சமீபத்திய பேட்டியில் தனக்கு ஏற்பட்ட வலி நிறைந்த அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக சில விஷயங்களை பேசி இருக்கிறார்.
அது பொதுவெளியில் பேசப்படும் கருத்துக்களை உடைக்கும் விதமாக அமைந்திருக்கிறது அவர் என்ன பேசினார் என்பது குறித்த சுவாரசியமான பதிவு தான் இது.
தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை பாவனா இடையில் ஒருவன் நடிகர் ஒருவரின் தவறான அணுகுமுறைக்கு உள்ளான இவர் அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுக்கி இருந்தார்.
அந்த நேரத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார். தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் பிரபல தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி எடுத்திருந்தார்.
அதில் அவர் கூறியதாவது, எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும் எல்லா பிரச்சினைக்கும் காலம் ஒரு அருமையான மருந்து என்று கூறுகிறார்கள்.
ஆனால், அது உண்மை கிடையாது. என்னதான் அது மருந்தாக இருந்தாலும் அதனுடைய ரணம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. என்னுடைய அப்பா, அண்ணன் ஆகியோரின் மறைவு கொடுத்தா வலி இருந்து கொண்டே தான் இருக்கிறது.
என்னுடைய தந்தையை இழந்தேன், என்னுடைய அண்ணனை இழந்தேன் காலம் அதற்கு மருந்தாக என்று கேட்டால் கிடையவே கிடையாது. அவர்கள் இல்லையே என்ற ரணம் என் மனதுக்குள் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
அவர்கள் இருந்திருந்தால் எப்படி இருக்கும்.. அவர்கள் இல்லாததால் என்னென்ன பிரச்சனைகள்.. இதையெல்லாம் யோசித்துப் பார்க்கும்போது மனம் காயப்படுகிறது.. அது வாழ்நாள் முழுக்க இருந்து கொண்டே தான் இருக்கும்.. எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்.. காலம் சிறந்த மருந்தாகும் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது என பேசி இருக்கிறார் நடிகை பாவனா.