“எனக்கு இது தான் பெருசு..” கூச்சமின்றி கூறிய நித்யா மேனன்..!
நடிகை நித்யா மேனன் தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதும் இவருக்கு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்று கலந்து கொண்ட இவர் தன்னுடைய வாழ்க்கையை எப்படி நகர்த்த விரும்புகிறேன் என்பது பற்றி பேசி இருந்தார்.
அவர் கூறியதாவது, ஒரு நடிகையாக.. பொதுவெளியில் ஒரு பிரபலமாக இருக்கும் நான்.. இதை கூறுவதற்கு நான் கூச்சப்படவில்லை. நான் என்னுடைய வாழ்க்கையை எப்போதும் கோபமாக.. என்னை விமர்சிப்பவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டு.. என்னுடைய கருத்துக்கு மாற்று கருத்து இருப்பவர்களுடன் விவாதம் செய்து கொண்டு இப்படி ஒரு இறுக்கமான மனநிலையில் என்னுடைய வாழ்க்கையை நான் வாழ விரும்பவில்லை. இதெல்லாம் சின்ன சின்ன விஷயங்கள்.
நான் என்னுடைய இந்த ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க விரும்புகிறேன்.. சந்தோஷமாக வாழ விரும்புகிறேன்… எனக்கு பிடித்த விஷயங்களை செய்து கொண்டு என்னுடைய நாட்களை மகிழ்ச்சியாக கடக்க வேண்டும்.. எனக்கு இது தான் பெரிய விஷயம் என கூறியுள்ளார்
நடிகை நித்யா மேனன் சமீபத்தில் இவர் தேசிய விருது வாங்கிய போது பலரும் தேசிய விருதுக்கு தகுதியானவர் இல்லை. நித்யா மேனன் திருச்சிற்றம்பலம் படத்தை காட்டிலும் எத்தனையோ நல்ல திரைப்படங்கள் வந்திருக்கிறது. எத்தனையோ நல்ல நடிகைகள் இருக்கிறார்கள்.
அப்படி இருக்கும்போது நித்யா மேனனுக்கு எதற்கு இந்த தேசிய விருது கொடுக்கப்பட்டது..? என சிலர் இணைய பக்கங்களில் விமர்சனங்கள் வைத்தார்கள். அப்போது, நடிகை நித்யா மேனன் இது என்னுடைய ஒரு படத்திற்கான விருது மட்டும் கிடையாது. நான் இத்தனை நாட்களாக கடந்து வந்த என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் தான் திருச்சிற்றம்பலம் வாய்ப்பு எனக்கு கிடைத்தது
அப்படி இருக்கும் பொழுது என்னுடைய ஒட்டு மொத்த திரைப்பயணத்திற்கான விருதாகத்தான் இதை நான் பார்க்கிறேன். ஒரு படத்தில் எனக்கு இந்த விருது கிடைத்துவிடவில்லை என பேசி இருந்தார்.
மேலும் இது பற்றி விமர்சிப்பவர்கள் நான் பதில் கொடுக்க விரும்பவில்லை. அவர்கள் விரும்பும் நடிகைகளுக்கும் கண்டிப்பாக ஒரு நாள் விருது கிடைக்கும் என்றும் கூறியிருந்தார்.
அதனுடைய வெளிப்பாடாகத்தான் என்னுடைய வாழ்க்கையை ஒரு போர்க்களமாக நான் பார்க்க விரும்பவில்லை. மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன் என்று பேசியிருக்கிறார் நடிகை நித்யா மேனன் என்று கூறுகிறார்கள்.