“குழந்தை இருக்கு என கெஞ்சியும் டார்ச்சர் செய்தார்..” மலையாள நடிகர் குறித்து நடிகை மீனா..!
பிரபல நடிகை மீனா மலையாள நடிகர் மோகன்லால் குறித்தும் அவருடைய திரிஷ்யம் படத்தில் ஹீரோயினாக நடித்தது குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார்.
அவர் கூறியதாவது, திரிஷ்யம் படத்தின் சூட்டிங் ஆரம்பிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தான் என்னுடைய மகள் நைனிகா பிறந்தால்.
கைக்குழந்தையுடன் இருக்கும் என்னை தொடர்பு கொண்டு திரிஷ்யம் படத்தில் நீங்கள் தான் ஹீரோயினாலும் நடிக்க வேண்டும் நீங்கள் நடித்தால் தான் சரியாக இருக்கும் என மோகன்லால் கூறினார்.
நான் என்னுடைய சூழ்நிலையை எடுத்து கூறினேன். படப்பிடிப்பு நடக்கும் இடமோ தொலைபேசி சிக்னல் கூட கிடைக்காத ஒரு குக்கிராமம்.
போதுமான மருத்துவ வசதிகள் இல்லாத ஒரு இடம். அவசரத்திற்கு ஏதாவது மருந்து வாங்க வேண்டும்.. மாத்திரை வாங்க வேண்டும் என்றாலும் கூட நீண்ட தூரம் பயணித்து வர வேண்டிய சூழல்.
இப்படியான விஷயங்களால் நான் நடிக்க மறுத்தேன். ஆனாலும், நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று நடிகர் மோகன்லால் தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார்.
நான் என்னுடைய குழந்தையை வைத்துக் கொண்டு அங்கு இருக்க முடியாது என கெஞ்சினேன். இருந்தாலும் நீங்கள் தான் நடிக்காத வேண்டுமென்று டார்ச்சர் செய்து அந்த படத்தில் நடிக்க வைத்தார்.
படம் வெளியான பிறகு அந்த படத்தில் நான் நடித்தது எவ்வளவு பெரிய விஷயம் என புரிந்து கொண்டேன்.
அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதே சமயம் படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய குழந்தைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மோகன்லால் செய்து கொடுத்தார் என பேசி இருக்கிறார் நடிகை மீனா.