“என் உடல் பாகங்களை அக்கு அக்கா பிரிச்சி..” சீரியல் சரண்யா பகீர்..!

“என் உடல் பாகங்களை அக்கு அக்கா பிரிச்சி..” சீரியல் சரண்யா பகீர்..!

சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடிய புகைப்படங்களுக்கு மோசமான கருத்துக்கள் தெரிவிக்கக்கூடிய ஆசாமிகள் குறித்து உங்களுடைய பார்வை என்ன..? உங்களுடைய அனுபவம் என்ன..? என்று பிரபல சீரியல் நடிகை சரண்யாவிடம் சினிஉலகம் யூட்யூப் சேனல் நடத்திய சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.

.அதற்கு பதில் அளித்த நடிகை சரண்யா ஒரு நடிகையாக நான் என்னுடைய சமூகவலைத்தள கணக்குகளை நிர்வகித்துக் கொண்டிருக்கிறேன்.

நமக்கு ஒரு மில்லியன் பாலோவர்கள் இருக்கிறார்கள். நாம் ஒரு புகைப்படம் வெளியிட்டால் 75 ஆயிரம் லைக்கள் வந்து குவிகிறது. பார்ப்பவர்களுக்கு இவர்களுக்கு என்ன..? பிரபலமாக இருக்கிறார்கள்..! இதற்கு இவர்களுக்கு எவ்வளவு லைக்குகள் வருகிறது..! என்றெல்லாம் பார்ப்பார்கள்.

ஒரு 75 ஆயிரம் லைக்கள் வந்துள்ள இடத்தில் குறைந்தபட்சம் ஒரு 3000 கமெண்டுகள் வந்திருக்கும்.. அந்த 3000 கமெண்டில் குறைந்தபட்சம் 100 கமெண்டுகள் என் உடல் பாகங்கள் பற்றி அக்கு அக்கா பிரித்து கமெண்ட் செய்திருப்பார்கள்.

முதலில் இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. எதற்காக இப்படி கமெண்ட் செய்கிறார்கள்..? என்றெல்லாம் வருத்தப்பட்டு இருக்கிறேன்.

ஆனால் ஒரு நடிகையாக என்னை பற்றிய தகவல்களை என்னுடைய அடுத்தடுத்த படங்கள் சீரியல்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கு சமூக வலைதளம் உதவியாக இருக்கிறது.

அதற்காகத்தான் நான் சமூக வலைதளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறேன். அப்படி இல்லை என்றால் இப்படியான சமூக நலங்களில் நான் இருந்திருப்பேனா என்று தெரியாது.

ஒரு கட்டத்தில் நான் ஒரு இடத்தில் நிற்கிறேன். ஆனால், நீ தேவையில்லாமல் வந்து என்னை இடித்து விட்டு செல்கிறாய் என்றால்.. தவறு என் மீது கிடையாது..உன் மீது தான் இருக்கிறது.. அது உன்னுடைய புத்தியை தான் காட்டுகிறது.. என்ற புரிதலுடன் இப்படியான விஷயங்களை கடந்து செல்ல பழகிக் கொண்டேன் என பேசியிருக்கிறார் சரண்யா.

இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES