கேரவனுக்குள் அத்துமீறி நுழைந்த இயக்குனர்.. ஆடையை கழட்டி அதை செய்தார்!! கஜால் அகர்வால் வேதனை..
டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆனவர் காஜல் அகர்வால். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய காஜல் அகர்வால், தனக்கு நடந்து கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் பேசுகையில், நான் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போது அதே படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர் ஒருவர் என்னுடைய அனுமதி இல்லாமல் கேரவனுக்குள் உள்ளை நுழைந்தார். உடனே அவர் அணிந்து இருந்த ஆடையை கழட்டி இதயத்தின் மீது இருக்கும் எனது பெயரோடு கூடிய டாட்டுவை காட்டினார்.
அந்த சமயத்தில் அவ்வாறு அவர் நடந்துகொண்டதை பார்த்து பயந்துவிட்டேன். அவர் என் மீது வைத்து இருந்த அன்பு மிகுதியால் அப்படி செய்து இருக்கலாம் ஆனால் அவர் வெளிப்படுத்திய விதம் சரியில்லை.
அவர் கேரவனுக்குள் நுழைந்து சட்டையை கழற்றியதும் நான் பயந்துவிட்டேன். பொது இடத்தில் கூட ரசிகர்கள் எல்லை மீறி அன்பை காட்டும் விதம் சங்கடத்தை ஏற்படுத்தும் என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார்.