படுக்கைக்கு அழைத்து டார்ச்சர்.. பிரபலங்களின் பெயர்களை அடுக்கிய சமீரா ரெட்டி..
பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த சமீரா ரெட்டி, கடந்த 2008 -ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து அசல், வெடி, வேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், 2014-ம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீரா ரெட்டி திருமணத்திற்கு பிருகு நேரத்தை குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு,. சமீரா ரெட்டி குறித்து பேசியுள்ளார். அதில் அவர், ஒரு சமயத்தில் மீ டூ விவகாரம் பூதாகரமாக வெடித்து வந்தது. அப்போது நடிகை சமீரா ரெட்டி தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசி. தன்னை யார் யார் டார்ச்சர் செய்தார் என்பதை அனைத்தையும் புட்டு புட்டு வைத்தார்.
இதனால் சில பிரபலங்கள் சிக்கி விட கூடாது என்பதற்காக சமீரா ரெட்டிக்கு போனில் அழைத்து, தயவு செய்து என் பெயரை சொல்லாதே என்றெல்லாம் பேசியதாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.