டே.. எப்புட்ரா..? நெப்போலியன் மகன் வாழ்க்கையில் அடுத்த சந்தோசம்..! கதறும் ரசிகர்கள்.!
பிரபல நடிகர் நெப்போலியன் மூத்த மகன் தனுசுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமணத்தை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
அதே சமயம் இந்த திருமணத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்தன. நடிகர் நெப்போலியன் இந்த செயலை விமர்சிக்கும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு தந்தையாக தன்னுடைய மகனுக்கு அவர் செய்ய வேண்டிய கடமையை செய்திருக்கிறார் என்று அவருக்கு வாழ்த்துக்களை பதிவு செய்யும் ரசிகர்கள் இருந்தார்கள்.
அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் தனுஷ். இதற்கிடையே அமெரிக்காவில் மீண்டும் சில மாதங்கள் கழித்து தன்னுடைய மகனுக்கும் மருமகளுக்கும் மீண்டும் திருமணம் நடக்கும் என்று நெப்போலியன் தெரிவித்திருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி அக்ஷயா உடன் தனுஷ் மகிழ்ச்சியோடு தங்களுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
அது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டு இருக்கிறார் தனுஷ்.
அதில் Pokemon 25வது வருட ஸ்பெஷல் எடிசனாக உருவாக்கப்பட்ட ஜாக்கெட் எனக்கு கிடைத்திருக்கிறது.
இது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. Pokemon எனக்கு மிகவும் பிடித்த ஒரு கதாபாத்திரம். இதனை பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என தன்னுடைய மகிழ்ச்சியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இதை பார்த்து ரசிகர்கள் அடுத்தடுத்து உங்களுக்கு பிடித்த விஷயங்கள் நடந்து நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தங்களுடைய வாழ்த்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.
அதே நேரம்.. டே.. எப்புட்ரா.. எங்களுக்கும் Pokemon-ஐ மிகவும் பிடிக்கும் எப்படி இந்த ஜாக்கெட்டை பெறுவது என்று கமெண்ட் செக்ஷனில் கதறி வருகின்றனர்.