“சின்ன வயசுலேயே அந்த உறுப்பு பெருசாகிட்டு..” கடவுளேன்னு அழுதேன்.. ரகசியம் உடைத்த பூமிகா..!
நடிகை பூமிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய சிறு வயதிலேயே கடவுளிடம் கண்ணீர் விட்டு கதறிய விஷயம் குறித்து பேசி இருக்கிறார்.
சிறுவயதில் கடவுளிடம் கண்ணீர் விட்டு கதறும் அளவுக்கு நடிகை பூமிகாவுக்கு என்ன நடந்தது..? தற்போது அந்த விஷயம் என்னவாக மாறியிருக்கிறது..? போன்ற சுவாரஸியமான தகவல்களை அடக்கிய பதிவுதான் இது.
நடிகை பூமிகா தமிழில் விரல் விட்டு என்னும் அளவிலான படங்களில் தான் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான பத்ரி, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன.
தமிழ் கன்னடம் தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடித்திருக்கும் இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் உங்களுடைய உதடுகள் குறித்து உங்களிடம் யாராவது ஏதாவது சொல்லி இருக்கிறார்களா..? ஏனென்றால் உங்களுடைய அழகிய உதடுகள் தான் உங்களுடைய அடையாளமாக இருக்கிறது என தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த நடிகை பூமிகா.. உண்மைதான், இன்று என்னுடைய உதடுகள் தான் என்னுடைய அடையாளமாக இருக்கிறது. ஆனால் சிறுவயதிலேயே என்னுடைய உதடுகள் பெரிதாகத்தான் இருந்தன.
இதனால் என்னுடைய நண்பர்கள் என்னை கிண்டல் செய்வார்கள். அப்போது நான் மிகவும் வருத்தப்பட்டேன். சாமி கும்பிடும் போதெல்லாம் கடவுளே எப்படியாவது என்னுடைய உதடுகளை சிறிதாக்கி விடு என்று கதறி இருக்கிறேன். கண்ணீர் விட்டு இருக்கிறேன்.
தற்போது அதனை நினைத்துப் பார்த்தால் எனக்கே சிரிப்பாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் இயற்கையாக நமக்கு இருக்கும் அழகுதான் நம்முடைய அழகு அதனை எக்காரணத்திற்காகவும் நாம் மாற்றிக்கொள்ள தேவையில்லை என்ற புரிதல் எனக்கு வந்தது.
தற்போது நிறைய பேர் என்னுடைய உதடு தான் என்னுடைய அடையாளம் என்று கூறுகிறார்கள். ஆனால், ஒரு காலத்தில் இதனை சிறிதாக்கி விடு என்று கடவுளிடம் நான் கதறிக் கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை என பேசி இருக்கிறார் நடிகை பூமிகா. இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.