என்கிட்ட எப்படி நடந்துகிட்டார் தெரியுமா!! அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி வாய்ந்திறந்த நடிகை காவியா..
தெலுங்கு சினிமாவில் ஏ மாய பிரேமிதா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிக்பாஸ் சீசன் டைட்டில் வின்னர் ஆரவ் நடிப்பில் வெளியான மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் தமிழில் நாயகியாக அறிமுகமாகி பிரபலமானார் காவியா தாப்பர்.
இப்படத்தினை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படத்திலும் நடித்து பிரபலமானார். அவர் நடிப்பில் விஸ்வம் என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறது.
இந்நிலையில், ஒரு பேட்டியொன்றில் கலந்து கொண்ட காவியா தப்பர், பாலியல் வழக்கில் கைதாகிய ஜானி மாஸ்டர் பற்றியும் சினிமாவில் நடக்கும் பெண்களுக்கு எதிரான தொல்லைகள் பற்றியும் பகிர்ந்துள்ளார்.
ஜானி மாஸ்டர் பற்றிய கேள்விக்கு, தன்னிடம் அவர் அப்படியெல்லாம் ஒரு போதும் நடந்தது கிடையாது, சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் விவகாரங்கள் நடக்க பெண்களும் முக்கிய காரணமாக உள்ளனர். பிரச்சனை நடக்கும் சமயத்தில் வாயை மூடிக்கொண்டு இருப்பதும் குற்றம் தான்.
அப்போதே அவர்கள் மெளனம் கலைந்து குரல் கொடுக்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்கள் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள், நான் ஒருபோதும் குற்றச்செயலுக்கு ஆதரவு தந்தது கிடையாது.
பெண் கலைஞர்கள் தங்களுக்கு அநீதி நடக்கும்போது சில காரணங்களுக்காக அமைதியாக இருந்துவிட்டு பின் அதுபற்றி பேசுவது சரியல்ல என்று காவிய தாப்பர் ஓப்பனாக பேசியிருக்கிறார்.