படுக்கையில் ஒரு மணி நேரம்.. என்ன ரேட்டு.. ஓப்பனாக கூறிய மிருணாள் தாகூர்..!

படுக்கையில் ஒரு மணி நேரம்.. என்ன ரேட்டு.. ஓப்பனாக கூறிய மிருணாள் தாகூர்..!

நடிகை மிருணாள் தாகூர் எப்போதெல்லாம் நான் என் மீது நம்பிக்கை இழக்கிறேனோ.. அப்போதெல்லாம் எனக்கு உற்சாகம் கொடுக்கக்கூடிய விஷயம் ஒன்று இருக்கிறது என கூறியுள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது, என் மீது எனக்கு நம்பிக்கை இழக்கும் போதெல்லாம்.. நான் என்னிடம் கேட்டுக் கொள்ளக்கூடிய ஒரு கேள்வி இருக்கிறது. அந்த கேள்வி என்னவென்றால் நான் எந்த வேலையும் செய்யாமல் படுக்கையில் ஒரு மணி நேரம் படுத்து இருக்கிறேன். 

யாராவது என்னிடம் வந்து ஏன் படுத்திருக்கிறாய்..? ஏன் எதுவும் செய்யாமல் இருக்கிறாய்..? என்று கேட்கப் போகிறார்களா..? கிடையாது. 

ஒரு மணி நேரம் அல்ல.. ஒரு நாள்.. ஒரு மாதம்.. ஏன் ஒரு வருடம் கூட படுக்கையில் படுத்து கொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறேன் என்றாலும் என்னை யாரும் கண்டுக்க மாட்டாங்க. 

எந்த வேலையும் செய்யாமல் கட்டிலில் படுத்துக்கொண்டு இருக்கும் நேரத்துக்கு ரேட் கிடையாது. ஒரு பைசா கூட வொர்த் கிடையாது.

நம்முடைய வாழ்க்கையை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். நம்முடைய வாழ்க்கையை நாம் தான் வாழ வேண்டும். நமக்கு பிடித்த விஷயங்களை செய்வது தான் நம்முடைய வாழ்க்கை. 

ஒரு விஷயத்தைப் பிடித்து அதனை செய்கிறோம் எனும் பொழுது அதில் நமக்கு தோல்வியே கிடையாது. நமக்கு பிடித்த விஷயத்தையே தொழிலாக மாற்றிக் கொண்டால் எப்போதும் தோல்வியே கிடையாது. 

அதே சமயம் எந்த ஒரு வேலையை செய்யும் போதும் அதனை முழு மனதுடன் கொண்டாடி செய்ய வேண்டும். அப்படி செய்ய முடியவில்லை எனும்போது அதிலிருந்து விலகி விடுவது தான் சிறப்பு.

ஏனென்றால் அதன் மூலம் உங்களுக்கு எந்த நல்ல பயனும் கிடைக்கப் போவதில்லை. நமக்கு பிடித்த வேலையை யோசிக்காமல் செய்ய வேண்டும். 

நான் சொன்னது போல படுக்கையில் ஒரு மணி நேரம் ஒரு நாள் ஒரு வாரம் ஒரு மாதம் படுத்திருந்தால் கூட நம்மை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். 

அப்படி இருக்கும் பொழுது அப்படி நம்மை கண்டுகொள்ளாதவர்களுக்காக.. அவர்கள் என்ன நினைப்பார்களோ..? இவர்கள் என்ன நினைப்பார்களோ..? என்று சிந்தித்துக் கொண்டு நம்முடைய வாழ்க்கையை நாம் வாழாமல் மற்றவர்களின் தேவைக்காக மற்றவர்களின் பார்வைக்காக வாழ்வதை வாழ்க்கையாகவே கருத முடியாது என பதிவு செய்திருக்கிறார் நடிகை மிருணாள் தாக்கூர்.

LATEST News

Trending News

HOT GALLERIES