‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்கு பறந்த ரஜினிகாந்த் - அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது எப்படி?

‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்கு பறந்த ரஜினிகாந்த் - அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது எப்படி?

‘தர்பார்’ படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

ஏற்கெனவே ஹைதராபாத்தில் ரஜினிகாந்தின் 60% காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் அவரது உடல்நிலை மற்றும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான தேதி டிசம்பர் 31-ம் தேதி அறிவிக்கப்படும் என்று இந்த மாதம் அறிவித்த ரஜினிகாந்த், ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டியது எனது கடமை என்றும் கூறியிருந்தார். அதன்படி இன்று ‘அண்ணாத்த’ ஷூட்டிங்குக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த். நாளை முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிகமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 




ஹைதராபாத் செல்லும் முன்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், 20 முதல் 25 நாட்கள் ‘அண்ணாத்த’ ஷூட்டிங் நடைபெறும் என்று கூறிவிட்டுச் சென்றார். டிசம்பர் 31-ம் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவேன் என்று ரஜினி அறிவித்திருக்கும் நிலையில் அதற்குள் எப்படி சென்னை திரும்புவார்? கட்சி அறிவிப்பை எப்படி வெளியிடுவார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES