ஜோவிகா ஒரு புறம் இருக்கட்டும்.. வனிதாவின் இரண்டாவது மகள் செய்வது என்ன தெரியுமா

ஜோவிகா ஒரு புறம் இருக்கட்டும்.. வனிதாவின் இரண்டாவது மகள் செய்வது என்ன தெரியுமா

திரையுலகில் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். இவர் மகள்களில் ஒருவர் தான் வனிதா விஜயகுமார். சினிமாவில் சில படங்களில் நடித்த இவர் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

அதன் பின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அதை தொடர்ந்து, பிக் பாஸ் மற்ற சீசன்களில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்தும் அவரது யூட்யூப் சேனலில் விமர்சனம் செய்து வருகிறார். 

ஜோவிகா ஒரு புறம் இருக்கட்டும்.. வனிதாவின் இரண்டாவது மகள் செய்வது என்ன தெரியுமா | Vanitha Second Daughter Detailsசினிமா வாழ்க்கை தவிர்த்து தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கிய வனிதா. மூன்று முறை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றுள்ளார். இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

ஜோவிகா ஒரு புறம் இருக்கட்டும்.. வனிதாவின் இரண்டாவது மகள் செய்வது என்ன தெரியுமா | Vanitha Second Daughter Detailsஇதில், மகன் அம்மாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார். இப்போது பிரபு சாலமனின் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார். 

மூத்த மகள் ஜோவிகா கடைசி சீசன் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது திரைத்துறையில் களமிறங்கியிருக்கிறார்.

வனிதாவுக்கு ஜோவிகா மட்டுமின்றி ஜெயா என்ற மகளும் இருக்கிறார். ஆனால் அவர் அவ்வளவாக வெளியில் தெரியாமல் இருக்கிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் வனிதா அவர் இரண்டாவது மகளான ஜெயா குறித்து பேசியுள்ளார். 

ஜோவிகா ஒரு புறம் இருக்கட்டும்.. வனிதாவின் இரண்டாவது மகள் செய்வது என்ன தெரியுமா | Vanitha Second Daughter Detailsஅதில், " என் இரண்டாவது மகள் தற்போது ஹைதராபாத்தில் அவருடைய அப்பாவுடன் வாழ்ந்து வருகிறார். நான் பிஸியாக இருப்பதால் அவர் அப்பாவுடன் இருக்கிறார். தற்போது அவர் 8 -  ம் வகுப்பு படித்து வருகிறார். எங்கும் காணாமல் எல்லாம் போகவில்லை" என்று கூறியுள்ளார்.   

LATEST News

Trending News