தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரகசிய சந்திப்பு.. மீண்டும் இணையப் போகிறார்களா, வெளிவந்த ஷாக்கிங் தகவல்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கடந்த 2004 - ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த கொண்டிருந்த இவர்கள் திடீரென கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர்.
இவர்கள் இருவரும் மீண்டும் இணைய வேண்டுமென்பதில் ரஜினி மிகத்தீவிரமாக இருந்தார். அதற்காக இருவரையும் அழைத்தும் பேசினாராம். ஆனால், அது எதுவும் செல்லாமல் போனது என சொல்லப்படுகிறது.
இதற்கிடையே விவாகரத்து முடிவை எடுத்த பின் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்கள் திருமணம் செல்லாது என கூறி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவையும் தாக்கல் செய்தார்கள்.
ஆனால், அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இருவருமே ஆஜராக வில்லை. அதனால் அவர்கள் இருவரும் விரைவில் இணைந்து விடுவார்கள் என பேசப்பட்டது.
இந்நிலையில், ஒரு புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக இருந்தபோது வாங்கிய வீட்டில் தற்போது சந்தித்துக்கொண்டு மனம் விட்டு பேசிவருவதாக கூறப்படுகிறது.
தங்களுக்குள் எந்தவிதமான பிரச்சனையும் வராமல் எப்படி பார்த்துக்கொள்வது என்று பல விஷயங்களை பகிர்ந்து வருவதாகவும், அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதை அவர்களே அறிவிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவலில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.