ட்ரெண்டிங் சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்... குவியும் லைக்குகள்
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது சேலையில் வெளியிட்டிருக்கும் கலக்கல் புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் மலையாளத்தில் வெளிவந்த கீதாஞ்சலி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயின்களின் பட்டியலில் குறுகிய காலத்திலேயே இடம் பிடித்துவிட்டார்.
தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் அவரை பலரும் பார்த்து ரசித்தது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் தான்.
அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வாய்ப்புகள் எல்லாம் பெரிய இடமாகத்தான் இருந்தது. அதை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சாமி - 2, அண்ணாத்த, சர்கார் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
தற்போது பாலிவுட் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள கீர்த்தி சுரேஷ் அட்லீ தயாரிப்பில் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள பேபி ஜான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் அழகிய சேலையில் குடும்ப பெண்ணாகவே மாறி கீர்த்தி சுரேஷ் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.