பிரபல வாரிசு நடிகரின் விவாகரத்து விஷயத்தில் சிக்கிய பாடகி!! அம்பலமான கோவா ரகசியம்...
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் வாரிசு நடிகர் ஒருவர், மனைவியுடன் வாழ்ந்த 15 ஆண்டுகளாக திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து அறிக்கை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். இந்த விஷயத்திற்கு என் குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது என்றும் அவரின் தனிப்பட்ட முடிவு என்றும் மனைவி இதற்கு பதிலும் அளித்திருந்தார்.
இதற்கு காரணம் அவரது மாமியார் தான் காரணம் என்று பலர் பலவிதமான கருத்தினை கூறி வருகிறார்கள். இந்நிலையில் வாரிசு நடிகர் சில மாதங்களுக்கு முன் கோவா அவுட்டிங்கிற்கு மனைவிக்கு தெரியாமல் சென்றிருக்கிறார். பெங்களூருவை சேர்ந்த ஒரு பாடகி கோவா பப்புகளில் பாடி வந்திருக்கிறார்.
இவர் ஆல்பம் பாடல்களிலும் பாடியும் தமிழில் பிரபல தயாரிப்பாளர் தயாரித்த ஆல்பத்திலும் பாடி இருக்க்கும் அந்த பாடகி ஏற்கனவே திருமணமானவர். அப்படி அவர் பாடி வந்த பப்பில் அந்த நடிகர் எதர்ச்சியாக சந்தித்துள்ளார். அவர் குரலுக்கு ரசிகராக இருந்த நடிகர் தோழியாக மாறி, அந்த பாடகியுடன் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.
ஜூன் மாதம் நடந்த தன்னுடைய திருமண நாளில் கூட அந்த நடிகர் மனைவியுடன் இல்லாமல் கோவாவிற்கு பறந்திருக்கிறார். ஷூட்டிங் என்று கூறி சென்றுள்ள அந்த நடிகர் எங்கு இருக்கிறார் என்பதை அறிந்து கோவாவிற்கு சென்றிருக்கிறார். ஆனால் அவரால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
இதன்பின் கோவாவில் நடிகரின் பெயரில் இருந்த விலையுயர்ந்த காரை அந்த பாடகி கோவா பகுதியில் ஓட்டி ஃபைன் கட்டியிருக்கிறார். பின் அதே காரை வேறொரு நாளில் அந்த நடிகர் அதிகவேகமாக ஓட்டி ஃபைனும் கட்டியிருக்கிறார்.
இந்த விஷயத்தால் தான் நடிகருக்கு மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாம். இதன்பின், அந்த நடிகர் மனைவியை கழட்டிவிட பிளான் செய்திருக்கிறார். ஆனால் நடிகரின் மனைவிக்கு அதில் விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கெல்லாம் அந்த பாடகிதான் காரணம் என்றும் பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.