பல கோடி கொடுத்து திரிஷா வீட்டை வாங்கிய பிரபல நடிகர்.. யார் தெரியுமா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி, தக் லைஃப் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
அதே போல் குட் பேட் அக்லி படத்திலும் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த GOAT படத்தில் கூட ஒரே ஒரு பாடலுக்கு திரிஷா நடனமாடி இருந்தார்.
இந்த நிலையில், தென்னிந்திய சினிமாவை கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை திரிஷா சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு விற்றுவிட்டு புதிய வீட்டிற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படம் நடிகரான பானு சந்தர் தான், நடிகை திரிஷாவின் வீட்டை பல கோடி கொடுத்து வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.