ஜெயம் ரவி எப்படி பட்டவர் தெரியுமா?.. விவாகரத்து நடக்க இதுதான் காரணம்.. காஸ்ட்யூம் டிசைனர் ஓபன் டாக்
ஜெயம் ரவியின் போகன் உள்ளிட்ட படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியுள்ள டாரத்தி ஜெய் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனக்கு ஏற்பட்ட விவாகரத்து குறித்தும் ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்தும் பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார்.
ஜெயம் ரவி, ஹன்சிகா, அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான போகன் படத்தில் தான் டாரத்தி ஜெய் காஸ்ட்யூம் டிசைனராக அறிமுகமானார். அதன் பின்னர், திருட்டுப்பயலே 2, இரவுக்கு ஆயிரம் கண்கள், மன்னவன் வந்தானடி, அதோ அந்த பறவை போல என பல படங்களில் பணியாற்றியுள்ளேன் எனக் கூறியுள்ளார்.
சிங்கிள் மதராக இருக்கும் டாரத்தி ஜெய் தனக்கு நடந்த விவாகரத்து பற்றி கூறியுள்ளார். சமீப காலமாக அதிகம் விவாகரத்து நடக்க காரணமே பெண்களும் சொந்தக் காலில் நிற்க ஆரம்பித்தது தான். அந்த காலத்தில் ஆண்கள் அடித்தால் கூட கணவர் என அடக்கி வாசித்துக் கொண்டு பெண்கள் அடங்கி இருப்பார்கள். ஆனால், சொந்தக் காலில் இருக்கும் இன்றைய காலத்து பெண்கள் அதற்கு எல்லாம் சகித்துக் கொள்ளாமல் விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருகின்றனர். வாழ்க்கை துணை என்பது நம்மை கெளரவமாக நடத்தவில்லை என்றால் அவருடன் இணைந்து வாழ்வதில் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை என டாரத்தி விஜய் கூறியுள்ளார்.
ஜெயம் ரவியின் விவாகரத்து தொடர்பான கேள்விக்கு அது அவர்கள் இருவரது தனிப்பட்ட விருப்பம். அதுபற்றி நான் எந்தவொரு கருத்தையும் கூற விரும்பவில்லை. தொழில் ரீதியாக ஜெயம் ரவியை பொறுத்தவரையில் ரொம்பவே ஜென்டில்மேன். அனைவரிடத்திலும் அன்பாகவும் கனிவுடனும் பேசக் கூடியவர். முதல் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் போதே அவருடைய நல்ல குணம் புரிந்து விட்டது எனக் கூறியுள்ளார்.