சொத்துக்கள் பறித்த முதல்.....ஸ்டார் நைட்களில் நடனமாட செய்த கணவர்.... நடிகை ஆதங்கம்
நடிகை சார்மிளா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நாயகியாக முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தன்னுடைய அப்பா ஒரு மருத்துவர் என்றும் சந்திரபாபுவுடன் நெருக்கமாக அவர் இருந்ததால் சினிமாவில் சிவாஜி உள்ளிட்டவர்களுடன் நெருங்கி பழகி வந்ததாகவும் சார்மிளா கூறியுள்ளார். சிறு வயதிலேயே தான் படங்களில் நடிக்க துவங்கிய நிலையில் குடும்ப கௌரவம் பாதிக்கும் என்று கூறி தன்னுடைய அப்பா தன்னை நடிக்க அனுமதிக்கவில்லை என்றும் ஆனால் தான் தன்னுடைய அப்பாவிடம் தொடர்ந்து போராடி சினிமாவில் நடிக்க வாய்ப்புகளை பெற்றதாகவும் சார்மிளா கூறியுள்ளார்.
முதலில் மற்ற மொழிப் படங்களில் நடிக்கவே தன்னை தன்னுடைய அப்பா அனுமதித்ததாகவும் அப்போதுதான் தன்னுடைய சொந்தக்காரர்களுக்கு தான் நடிப்பது தெரியாது என்று அவர் நினைத்ததாகவும் படிப்பு பாதிக்கப்படாமல் நடிக்க தன்னை அவர் அனுமதித்ததாகவும் சார்மிளா கூறியுள்ளார். இந்நிலையில் நடிகர் நம்பியாரிடம் பேசியே தமிழில் படத்தில் நடிக்க தான் அப்பாவிடம் ஒப்புதல் வாங்கியதாகவும் சார்மிளா கூறியுள்ளார். தொடர்ந்து சில படங்களில் தான் மிகவும் அமைதியான கேரக்டர்களில் நடித்ததாகவும் ஆனால் அந்த நேரத்தில் மற்ற நடிகைகள் மிகவும் கவர்ச்சியாக நடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழில் டயலாக்குகளை மனப்பாடம் செய்வது தனக்கு எளிதாக இருந்ததாகவும் மற்ற மொழிகளில் நடிக்க தான் மிகவும் சிரமப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தன்னுடைய சொத்துக்களை ஏமாற்றி வாங்கிய தன்னுடைய முதல் கணவன், அவரது நண்பரின் மனைவியுடன் உறவில் இருந்ததாகவும் சார்மிளா தெரிவித்துள்ளார். படங்களில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யாததால் தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காமல் தான் ஏழையாக மாறியதாகவும் அவர் கூறியுள்ளார். தான் லவ் செய்ததால்தான் தனக்கு பட வாய்ப்புகள் குறைந்ததாக பலரும் கூறும் நிலையில் அது உண்மையில்லை என்றும் சார்மிளா தெரிவித்துள்ளார்.
தனக்கு லவ்வர் இருந்ததாலேயே அவரை பார்த்து பயந்து தன்னை பாலியல் ரீதியாக யாரும் துன்புறுத்தவில்லை என்றும் சார்மிளா கூறியுள்ளார். மதரீதியாக தான் தன்னுடைய திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்தித்ததாகவும் அதுவும் தான் அதிலிருந்து விலக காரணம் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே, தன்னுடைய சொத்துக்களை பதுக்கிய முதல் கணவர், தன்னை ஸ்டார் நைட்களில் நடனமாட செய்ததாகவும் சார்மிளா தெரிவித்துள்ளார்.
தற்போது பெண்களுக்கு ஹேமா கமிட்டி கிடைததுள்ளதாகவும் அதை அவர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சார்மிளா கூறியுள்ளார். ஆண்களும் விரும்பி வருபவர்களிடம் உறவுகொள்ள வேண்டும் என்றும் யாரையும் வலுக்கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் சார்மிளா தெரிவித்துள்ளார்.